க.கிஷாந்தன்-
நுவரெலியாவிலிருந்து பொகவந்தலாவ பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் குறித்த முச்சக்கரவண்டி பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
08.04.2017 அன்று மதியம் 2.30 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டியின் தடுப்புக்கட்டை செயழிழந்ததன் காரணமாக இவ் நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
முச்சக்கரவண்டியில் சாரதியும், மற்றொருவரும் பயணித்துள்ளதாகவும், இருவரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை தற்பொழுது நுவரெலியா வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பித்து நடந்து வருவதால் அதிகமானவர்கள் வெளிமாவட்டங்களிலிருந்து இதனை கண்டுகளிப்பதற்காக வருகை தந்த வண்ணமே உள்ளனர்.
இதனால் இவ்வீதிகளில் விபத்துகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொலிஸார் தெரிவிப்பதோடு, இதனை கருத்திற் கொண்டு விபத்துகளை தடுக்கும் வகையில் சாரதிகளுக்கு தெளிவுப்படுத்தும் வகையில் எச்சரிக்கை விளம்பர பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும் வாகன சாரதிகளும் வாகனங்களை அவதானத்துடன் செலுத்துமாறு சாரதிகளிடம் போக்குவரத்து பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.