மீதொடமுல்ல குப்பை மேடு சம்பந்தமாக நீண்ட காலமாக பேசப்பட்டு வந்த போதிலும், அதற்கு முறையான தீர்வொன்று பெறப்படாதுள்ளமை ஏன் என்று தெரியாதுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.
சுகாதாரமான முறையில் குப்பைகளை கொட்டும் இடம் ஒன்றை அமைப்பது இதற்கான தீர்வாகும் என்றும், கொரிய நாட்டின் உதவியுடன் தொம்பே பிரதேசத்தில் இதுபோன்ற ஒரு இடம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் நாடு பூராகவும் இது போன்ற 05 குப்பை கொட்டும் இடங்களை அமைப்பதற்கு முன்னர் பேசப்பட்டதாகவும், அது ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று தனக்கு தெரியாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். dc