நிந்தவூரில் புதிய சதொச கிளை நிறந்து வைப்பு..!

ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
நிந்தவூர் பிரதான வீதியில் புதிய 'சதொச' கிளை நவீன வசதிகளுடன் கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டது. சதொச நிறுவனத்தின் அம்பாரை மாவட்ட பிராந்திய முகாமையாளர் எம்.ஏ.ஹசன் அலி தலைமையில் நடைபெற்ற இத்திறப்பு விழாவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும், வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிசாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, சதொச கிளையைத் திறந்து வைத்தார்.

இத்திறப்பு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் இம்றான் மஃறூப், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பி.மஜீட், தென் கிழக்குப் பல்கலைக் கழக முன்னாள் உபவேந்தர் வீ.சீ.இஸ்மாயில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் சுபைதீன் ஹாஜியார் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அமைச்சர் றிசாட் பதியுதீன் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 

'மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் நாட்டின் நாலாபக்கங்களிலும் 500 சதொச கிளைகளைத் திறக்க வேண்டும் என்ற திட்டத்தின் கீழே இன்று நிந்தவூர் கிளையும் நவீன வசதிகளுடன், கணனி மயப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டு திறக்கப்படுகிறது' எனத் தெரிவித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -