காரைதீவு நிருபர் சகா-
வரும் வியாழக்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள முழு அடைப்புக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தனது பூரண ஆதரவைத் தெரிவித்து சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் தலைவர் வி.ரி.சகாதேவராஜா பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் ஆகியோர் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை. வடகிழக்கில் வாழ்கின்ற மக்களில் இயல்புநிலையில் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. மாற்றங்கள் ஏற்படுவதற்காக பல்வேறு விட்டுக்கொடுப்புகளையும் தியாகங்களையும் எமது இனம் சார்ந்த கட்சிகளும் மக்களும் செய்தபின்னரும் எதுவுமே நடைபெறவில்லை.
ஆயுதப்போராட்டம் அறவழிப்போராட்டமாக மாறி அனைத்துத் தரப்பினரும் வீதியில் நாட்கணக்காக மாதக்கணக்காக போராடும் நிலை உருவாகியுள்ளது. காணிக்காகவும் இழந்த அல்லது காணாமல்போன மக்களுக்காகவும் பட்டத்திற்கா அரச தொழிலுக்காகவும் மாதக்கணக்கில் போராடிவேண்டிய உள்ளது.
எதையும் யாரும் கண்டுகொள்வதாக இல்லை.
இத்தகைய நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்துத் தரப்பினரும் ஒன்று சேர்ந்து முன்னெடுக்கும் இத்தகைய அறவழிப்போராட்டம் வெற்றியளிக்கவேண்டும்.
அதற்காக வடக்கு கிழக்கில் வாழுக்கின்ற அனைத்து மக்களும் விசேடமாக கல்விப்புலம் சார்ந்த அனைவரும் ஒன்று சேர்ந்து வியாக்கிழமை நடைபெறும் முழு அடைப்புக்கு பூரண ஆதரவை வழங்குவதோடு இதுபோன்ற முனைப்புக்களைத் தொடர்ந்தும் எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.