(M.a.g.m Muhassin)
"தென்கிழக்கு பல்கலையில் புதுமுக மாணவ மாணவிகளுக்கு உள்ளாடை அணிய தடை.18 மாணவிகள் உள்ளிட்ட 28 மாணவர்களுக்கு 30 நாள் வகுப்பு தடை"இப்படி ஒரு செய்தி சுமார் 3 நாட்களுக்கு முன் வெளியாகியது. அவ்வளவு தான் வெளிச்சத்தைக் கண்டவுடன் அதை நோக்கிப் படையெடுக்கும் சிற்றீசல்களைப் போல பேஸ்புக் நாட்டாமைகள் எல்லோரும் சொம்பைத் தூக்கிக்கொண்டு "எலே சின்ராசு!! எட்ரா வண்டிய, கூட்ரா பஞ்சாயத்த" என்று கிளம்பி வந்துவிட்டார்கள்.
"இவர்களெல்லாம் முஸ்லிம் மாணவர்களா? இவர்களுக்கு ஒழுக்கமில்லையா? ஈமான் இல்லையா? இஸ்லாம் இல்லையா? அது இல்லையா? இது இல்லையா? என்று ஆயிரத்தெட்டுக் கேள்விகள். இதில் சில கெட்ட ஜின்கள்... அதாங்க பேக் ஐடிகள் "உங்களையெல்லாம் உம்மா வாப்பா படிக்க அனுப்பினயா இல்லாட்டி ஜ...ய கழைய அனுப்பினயா" என்று அப்பட்டமான கெட்ட வார்த்தைகளில் ஸ்டேட்டஸ் போட, அதற்கும் 100 பேர் லைக் பண்ணி தங்கள் அமோக ஆதரவைத் தெரிவிக்க, இதையெல்லாம் பார்த்து கண்கலங்கிப் போன பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் "அது நாங்க செய்யல்ல எசமான். சிங்கள மாணவர்கள் தான் செஞ்சாங்க" என்று மெல்லிய குரலில் அபயக் குரல் எழுப்ப, இதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாத பேஸ்புக் நாட்டாமைகள் சங்கம் "அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது உங்களையெல்லாம் 3 மாசத்துக்கு பேஸ்புக்க விட்டுத் தள்ளி வைக்கிறோம்டா.. இதான் இந்த நாட்டாமையோட தீர்ப்புடா, நீதிடா நேர்மடா, ஞாயம்டா" என்கிற ரேஞ்சுக்கு டயலாக் பேச சூடுபிடித்துப் போயிருக்கிறது முகநூல் களம்.
உங்கள் அனைவருக்கும் ஒரு விடயத்தை தெளிவாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. தென்கிழக்குப் பல்கலைக்கழகம் என்றாலே முஸ்லிம்கள் தான் என்கிற காலம் மலையேறிவிட்டது. இப்போது அங்கே நிலவரம் 6:4. அதாவது 60 வீதம் முஸ்லிம் மாணவர்கள் 40 வீதம் முஸ்லிம் அல்லாத மாணவர்கள். ஆக.. அங்கே எது நடந்தாலும் முஸ்லிம் மாணவர்கள் மீது பழி போடுவதை முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்த உள்ளாடை ரெகிங் மேட்டர் சிங்கள மாணவ மாணவிகளால் அவர்களுக்குள் நடந்த ஒரு விடயம். அதை அவர்களுடைய சமுகம் பார்த்துக் கொள்ளும். ஏன் சிலவேளை அதை அவர்கள் கணக்கெடுக்காமல் கூட விட்டுவிடலாம். அது அவர்கள் சார்ந்த விடயம். அதில் நாம் மூக்கை நுழைக்கத் தேவை இல்லை.
பல்கலைக்கழக நிர்வாகம் முற்றுமுழுதாக ரெகிங்கிற்கு எதிராக இருக்கிறது. பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி நாஜீம் அவர்கள் மிகவும் கண் இமை போன்று நிர்வாகம் செய்யும் இவ் கால கட்டத்தில், கடந்த வருடத்திலிருந்து மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆரமித்திருக்கிறது. இப்போதைய சூழ்நிலையில் ஒரு சீனியர் மாணவன் ஒரு ஜூனியர் மாணவனைக் கூப்பிட்டு லேசாக அதட்டினால் போதும் கதை முடிந்தது. தூக்கி வெளியே போட்டுவிடுவார்கள். அப்படி சில பேரைத் வகுப்புத்தடை செய்ததன் பிற்பாடு, இப்போது சீனியர் மாணவர்கள் ஜூனியர்களுடன் பேசுவதற்கே தயங்குகிற சூழல் தான் அங்கே இருக்கிறது. வெறும் வகுப்புத்தடையோடு முடிந்துவிடுவதில்லை. அவர்களுடைய மஹபொல பேர்ஸரி கொடுப்பணவுகளும் நிறுத்தப்படும். சிங்கள மாணவ சமூகத்தைப் பொறுத்தவரை அப்படியான கெடுபிடிகளுக்கு அவர்கள் உட்படுத்தப்படுவதில்லை. ஆனால் அவர்களுக்கும் இதே தண்டனை தான். அவர்கள் இவ்வாறு அளவை மீறும் போது தான் தண்டிக்கப்படுகிறார்கள். ஆனால் இதன்பிறகு அவர்களுக்கும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கும்.
விஷயம் இவ்வாறிருக்க இது எதுவுமே தெரியாமல் வெளியிலிருப்பவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு பழி போடுகிறபோது அதற்கு பதிலளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏற்படுகிறது. மாதத்திற்கு ஒரு பஞ்சாயத்தை கிளப்பிவிட்டுவிடுகிறீர்கள். அங்கே அவர்கள் படிக்கிற வேலையைப் பார்ப்பதா அல்லது உங்களுக்கு பதில் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருப்பதா??
கனம் முகநூல் போராளிகளே..!! அநீதிகளைக் கண்டால் பொங்குங்கள் பரவாயில்லை கொஞ்சம் நிதானமாக விசாரித்துவிட்டுப் பொங்குங்கள்.