கிழக்கு முதல்வரால் அபிவருத்தியடையும் கல்குடாவும், மு.காவும் - லியாப்தீன்

கல்குடா தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் -

முதலமைச்சரின் வருகைக்கு முன் கல்குடா தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளை வழி நடாத்திய முன்னாள் தவிசாளர் கட்சி சார்பான அபிவிருத்தியையோ கட்சி வளர்ச்சியையோ மேற்கொள்ளாது செயற்பட்டமையால் கட்சிப் போராளிகள் வெறுப்பற்று காணப்பட்டனர். போராளிகளின் இப்மனப்போக்கில் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களின் வருகையின் பிற்பாடு அதாவது 2012 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரைக்கும் கல்குடாத் தொகுதி பாரிய மாற்றங்களை கண்டுவருவதுடன் கல்குடா தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் பலப்படுத்தப்பட்டு வளர்ச்சி கண்டு வருகின்றது. 

அந்த வகையில் முதலமைச்சரின் செயற்பாட்டின் கீழ் பின்வரும் அபிவிருத்தி பணிகளை குறிப்பிட முடியும். 

கிழக்கு மாகாண முதலமைச்சரின் தலைமையின் கீழ் கல்குடாத் தொகுதி பாரிய அபிவிருத்தியடைந்து வருகின்றது என்பதை யாறும் மறுப்பதற்கில்லை. இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு, பாடசாலைகளுக்கான கட்டிடம், வீதி புனரமைப்பு, சுகாதார அத்தியேட்சகர் காரியாலயக் கட்டிடங்கள், பள்ளிவாயல்களின் பௌதீக வளங்களை விஸ்தரித்தல், விளையாட்டு கழகங்களுக்கான நிதிவுதவி, சமூக மட்ட அமைப்புக்களுக்கான உதவி, பிரதேச சபைகளுக்கான வேலைத்திட்டங்கள், கிராம மட்ட அபிவிருத்தி சங்கம் மற்றும் மாதர் அபிவிருத்தி சங்கம் போன்ற அமைப்புக்களுக்கான சுய தொழில் ஊக்குவிப்புத் திட்டம் போன்ற அனேக அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு இப்பிரதேசத்தில் பாரிய தொழில்பேட்டை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றார். 

அதேபோன்று எமது கட்சியை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலின் போது கல்குடா தொகுதியில் கட்சிக்கு எதிராக இருந்து செயற்பட்ட சகோதர்கள் பலர் முதலமைச்சரின் முயற்சியினால் கட்சியுடன் இணைக்கப்பட்டு அவர்களுக்கு உரிய கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. 

எனவே, கட்சி தலைவர் கல்குடாவுக்கு வரவில்லை என்ற எதிர்த்தரப்பினரின் விமர்சனத்தை போக்கும் முகமாக பிரதித்தலைவர் என்ற வகையில் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்கள் சேவையாற்றி வருகின்றார் ஒரு மாதத்தில் குறைந்தது 2 தடவையாவது கல்குடாவுக்கு விஜயம் செய்து இங்குள்ள மக்களின் தேவைகளையும், குறைகளையும் போக்கி வருகின்றார் என்றால் அது மிகையில்லை. அத்தோடு கல்குடா பிரதேசத்துக்கான அபிவிருத்தி குழுவை நியமித்து அந்த குழுவின் ஊடாக அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான செயற்திட்டங்களை வகுத்து செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

எனவே, எதிர்காலத்தில் பிரத்யோகமாக தேசிய தலைவரின் அபிவிருத்தி திட்டங்களை கல்குடாத் தொகுதியில் முன்னெடுப்பதற்கான ஆயத்தங்களை கட்சி போராளிகள் மட்டத்தில் கலந்துரையாடி அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

அதேபோன்று நடைபெறவுள்ள மாகாண சபை மற்றும் பிரதேச சபை தேர்கல்களின் போது கல்குடாத் தொகுதிக்கான அதிகாரங்களை பெற்றுக்கொடுப்பதில் முதலமைச்சர் உறுதியாக இருப்பதுடன் அதற்கான சகல வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பதற்கான அதிகாரத்துடன் முதலமைச்சர் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. 

எனவே, கடந்த காலங்களைப் போலல்லாது முதலமைச்சரின் அரசியல் பிரவேசத்துடன் கல்குடாத் தொகுதி அபிவிருத்தி கண்டு வருவதுடன் கட்சியும் பாரிய வளர்ச்சியை அடைந்து வருகின்றது. எதிர்காலத்தில் தேர்தல் ஒன்றுக்கு முகம்கொடுக்கும் போது இதன் பிரதிபலன்களை கல்குடாத் தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் கண்டு கொள்ள முடியும். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -