அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை. நிலாவெளி, கோபாலபுரம் பகுதியைச்சேர்ந்த 38வயதுடைய பெண்ணொருவர் இன்று (11) 2.45 மணியளவில் காய்ச்சல் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
கடந்த நாட்களாக காய்ச்சல் காணப்பட்டதாகவும் இன்றைய தினம் தனியார் மருத்துவமனையில் இரத்தம் பரிசோதனை செய்ததாகவும் அதனையடுத்து அரச வைத்தியசாலைக்கு சென்று ஆலோசனை வழங்கியதாகவும் தந்தையான மகாலிங்கம் தெரிவித்தார்.
குறித்த பெண்ணின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.