எம்.எம்.ஜபீர்-
மட்டுப்படுத்தப்பட்ட சம்மாந்துறை விவசாய அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட 60 விவசாயிகளுக்கான விவசாய உபகரணம் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் அமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு மட்டுப்படுத்தப்பட்ட சம்மாந்துறை விவசாய அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் ஏ.எல்.உதுமாலெவ்வை தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் மன்சூர் ஏ காதிர், சம்மாந்துறை கூட்டுறவு அபிவிருத்தி அலுவலகத்தின் கணக்காய்வாளர் எம்.நிஜாமுத்தீன், கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் செயலாளர் வை.வீ.சலீம், சபீனா கோல்ட் ஹவுஸ் உரிமையாளர் கே.இஸ்மாயில், ஏ.நிஸார், எஸ்.காதர் உள்ளிட்ட விவசாய அமைப்பின் பிரதிநிகள் என பலரும் கலந்துகொண்டனர்.