அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைக்குள் புதிய சிகரட் நிறுவனம் ஒன்று பதிவு செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து ஆராய்ந்து, இதன் பின்னணியில் இருக்கும் வர்த்தகர்கள் தொடர்பில் நாட்டுக்கு வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க எமது சங்கம் முடிவு செய்துள்ளது.
நாட்டில் சிகரட் உற்பத்தினை குறைப்பதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பக்கபலமாக செயற்பட்டுள்ளது. அதனால் பக்க பலமாக செயற்பட்டோம். எனவே தற்போது சிகரட் உற்பத்தியை தடுப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்திருக்க முடியும்.
இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் சிகரட் உற்பத்தியை குறைக்க பல தரப்புகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்ற போது மறுபுறத்தில் சட்டவிரோதமான முறையில் சிகரட் நிறுவனம் ஒன்று நாட்டினுள் நிறுவப்பட்டு வருகின்றது.
இந்த செயற்பாடுகளின் பின்னால் உள்ள வர்த்தகர்கள் யாவர் என்பதை நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதியிடத்தில் கோரிக்கை விடுக்கும் அதேவேளை நாட்டில் சிகரட் உற்பத்தியை மட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முழு மூச்சுடன் செயற்படும் என்றார்.(வீரகேசரி)