இறக்காமம் சம்பவத்தில் இனவாதம் பரப்பும் சிங்கள ஊடகங்கள்..!


றக்காமத்தில் உணவு நஞ்சான சம்பவத்தினை இலங்கையின் முன்னணி வானொலி நிறுவனம் இனவாத ரீதியில் செய்திவெளியிட்டுள்ள அதேவேளை அந்த செய்தியை பிரபல சிங்கள இணையதளங்களும் இனவாத ரீதியில் செய்திவெளியிட்டுள்ளன.

இறக்காமத்தில் மாட்டிறைச்சி சப்பிட்ட நால்வர் பலி என குறித்த வானொலி செய்தி வெளியிடுள்ள அதேவேளை பள்ளிவாயலில் மாட்டிறைச்சி சாப்பிட்ட ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலையில் நால்வர் பலி என சிங்கள இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதே நேரம் மரணமடைந்தவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பாடசாலை வீதி, இறக்காம் - 06 ஐச் சேர்ந்த, ஆதம்பாவா அபூபக்கர் காசிம் (53), 
ஓட்டுத் தொழிற்சாலை வீதி, இறக்காமம் 06 ஐச் சேர்ந்த மஜீத் ஹலீமா (48) 

ஆகியோர் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதோடு, 

சபா வீதி, இறக்காமம் 04 ஐச் சேர்ந்த மரியம் கண்டு (65) என்பவர்

சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மரணமடைந்துள்ளார்.

இதேவேளை, மிக சிறிய வைத்தியசாலையான இறக்காமத்தில் 11 கட்டில்களே காணப்படுவதோடு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், நடைபாதையிலும் வைத்தியசாலையின் முன்றலிலும் கூடாரங்கள் போன்று அமைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கல்முனை, அக்கரைப்பற்று, அம்பாறை, சம்மாந்துறை, மட்டக்களப்பு உள்ளிட்ட குறித்த பிரதேசத்தைச் சூழவுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலுமிருந்து அம்பியுலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டோரை, குறித்த வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நேற்று (06) பிற்பகல் இடம்பெற்ற குறித்த கந்தூரி வைபத்தின்போது, ஆரம்பத்தில் சமைக்கப்பட்ட உணவை உட்கொண்ட குறித்த பிரதேச (வாங்காமம்) மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அதன் பின்னர் சமைத்த உணவே இவ்வாறு நஞ்சாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த உணவுகளைத் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் குறித்து, சுகாதார மருத்துவ அதிகாரிகளால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, பயன்படுத்தப்பட்ட பொருட்களில் எவ்வித காலாவதியான பொருட்களும் காணப்படவில்லை என ஆரம்பக்கட்ட பரிசோதனைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த சம்பவத்தில் வயதானவர்களும், சிறுவர்களுமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -