மஹிந்தானந்த அலுத்கமகே இன்று மீளவும் திருமண பந்தத்தில்

முன்னாள் அமைச்சரும் கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினருமான மஹிந்தானந்த அலுத்கமகே இன்று மீளவும் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருமண நிகழ்விற்கு குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

எவ்வாறெனினும், திருமணத்தை முன்னிட்டு இன்று இரவு மஹிந்தானந்தவின் கொழும்பு இல்லத்தில் விசேட வரவேற்பு விருந்துபசாரமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த நிகழ்விற்கு நெருங்கிய அரசியல் நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விவசாய அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திஸாநாயக்கவின் முன்னாள் மனைவியும், முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்னவின் மகளுமான செனானி ஜயரட்னவையே மஹிந்தானந்த இன்று கரம் பிடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -