ஹஸ்பர் ஏ ஹலீம் -
கடந்த நாட்களாக பேசும் பொருளாக மாறியிருக்கும் ஏழை கூலித் தொழிலாளி அஷ்ரப் (பிச்சைத் தம்பி சம்சுதீன்)அவரின் வீடும் அவரின் வாழ்க்கையும் சமூக வலைத்தளங்களில் சுட்டிகாட்டியதன் விளைவாக இலங்கை, இலங்கை வாழ் வெளிநாட்டு முஸ்லீங்களின் கவனம் அதிகமாக அவரையும் வீட்டையும் கிண்ணியா முஸ்லீம்களின் ஏழ்மையை ஆராயும் விடயமாக மாறியுள்ளது பல இடங்களிலிருந்து படை எடுக்கும் தனவந்தர்கள் அக்குடும்பம் சகிதம் ஏனைய இவரின் வாழ்க்கையை ஒத்த ஏழைகளுக்கு உதவ முன்வந்திருப்பதும், உதவுவதும் பலரது கவணத்தை ஈர்த்து கிண்ணியா வாழ் ஏழைகளுக்கு மேலும் பலர் உதவிகளை எதிர்வரும் ரமழான் மாதத்தில் உதவ தயார் நிலையிலுள்ளனர்.
கொழும்பில் இருந்து வந்த சில சகோதர்கள் இன்று(29) இவரின் வாழ்க்கையை ஒத்த பல வீடுகளுக்கு சென்று உதவியிருப்பதும் இது போன்ற ஏனைய வீடுகளையும் கட்டிக்கொடுக்க முன் வந்திருப்பதும் அவர்களது முன்மாதிரியை எடுத்துக்காட்டுகிறது. மின்சாரம் இல்லாத குடும்பத்துக்கு இணைப்புப் பெற உடனடியாக பணத்தைக் கொடுத்துதவியதுடன் விசேட தேவையுடைய சிறுவர்களின் வீடுகளுக்கும் சென்று உதவியிருப்பது அவர்களின் முன்மாதிரியான வாழ்க்கையை எடுத்துக்காட்டுகிறது.இது போன்று மேலும் பலர் அக்கிராமத்தை நோக்கி இலங்கையின் பல பாகங்களில் இருந்து வந்து விசாரித்து செல்வதும் அவர்களுக்கு உதவுவதுமாகவுள்ளனர் .எனவே கிண்ணியா வில் இன்னும் நூற்றுக்கணக்கான அஷ்ரப்கள் இதை ஒத்த வாழ்க்கையை வாழ்கின்றனர்கள் அவர்களது ஏழ்மையை போக்க இலங்கை,உலகவாழ் முஸ்லீம்கள் படையைடுத்து அவர்களது குறைகளை நீக்கி உதவவேண்டும் .இங்கு அஷ்ரபுடைய குடும்பம் ஏனைய ஏழைக்குடும்பங்களுக்கும் உதவும் அனைவருக்கும் அவர்களுடைய பொருளாதாரம், ஆரோக்கியம் போன்றன விருத்தியடைய அனைவர்களது துஆவிலும் சேர்த்துக்கொள்ளவும்.