அம்பாறை சவளக்கடை பிரதேசத்தில் நீண்டகாலமாக குடிநீர் இன்மையால் மக்கள் அவதி.!

எம்.எம்.ஜபீர்-
டந்த 2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் மருதமுனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது பிரதேசங்களில் பாதிக்கப்பட்டவர்களில் 15 குடும்பங்கள் நாவிதன்வெளி பிரதேசத்தின் கீழுள்ள சவளக்கடை 5ஆம் கொளனி பிரதேசத்தில் ஜம்மியத்துல் இஸ்லாமிய நிறுவனத்தினால் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டு குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

சுனாமி பாதிக்கப்பட்ட மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்தில் நீண்டகாலமாக குடிநீர் இன்மையால் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

தற்போது தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவில் நீர்குழாய்கள் போடப்பட்ட போதிலும் இவ்வீட்டுத்திட்ட பிரதேசத்திற்கு நீர்குழாய் பதிக்கப்படாதுள்ளதாக பிரதேச மக்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து நேற்று(9)அவர் கிழக்கு மாகாண உதவி பொது முகாமையாளர் எம்.எம்.நசீல் சகிதம் குறித்த வீட்டுத்திட்டத்திற்கு சென்று பார்வையிட்டதுடன், வீட்டுதிட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு துரிதமாக குடிநீரை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தினார்.

இதன்போது மத்தியமுகாம் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறுப்பதிகாரி ஏ.எம்.ஏ.நாஸரிடம் வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக குடிநீரை வழங்குவதற்கான சாத்தியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் ஆலோசனை வழங்கினார்.

இவ்விஜயத்தின் போது நாவிதன்வெளி பிரதேச ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளர் ஏ.சீ.நஸார் ஹாஜி, சவளக்கடை பிரதேச ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுவின் தலைவர் ஏ.அஸீஸ், சவளக்கடை பிரதேச ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுவின் செயலாளர் ஏ.எல்.ஜலீல், சவளக்கடை பிரதேச ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுவின் பொருளாளர் எம்.பீ.நபாஸ், பிரதேச முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் இணைந்திருந்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -