யாழில் மின்சாரம் தாக்கியதில் கணவன் மனைவி பலி..!

பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் மின்சாரம் தாக்கி கணவன் - மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை (07) இரவு ஐயனார் கோவில் பகுதியிலுள்ள வீடொன்றில் வீட்டில் அலங்கார வேலைகளில் ஈடுபட்டிருந்தபோதே இருவர் மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது.

இன்று சனிக்கிழமை (08) காலை உறவினர்கள் அவ்வீட்டுக்குச் சென்றபோதே சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் அப்பகுதியிலுள்ள ஆலய உற்சவத்தையொட்டி அலங்கார வேலைகளில் ஈடுபட்டிருந்தபோதே மின்சாரம் தாக்கியுள்ளதாக விசாரணையில் இருந்து தெரிய வருகின்றது.

மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -