எஸ். ஹமீத்-
காஷ்மீர் பிரிவினைவாத பெண் தலைவர்களில் முக்கியமானவரெனக் கருதப்படும் ஆசியா அந்த்ரோபி கைது செய்யப்பட்டுள்ளார். தேச ஒற்றுமையை குலைக்கும் வகையில் இவரது பேச்சுக்கள் இருப்பதாகவும் மேலும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலும் கைது செய்திருக்கிறது இந்திய போலீஸ் படை.
அத்துடன் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிராக நடக்கும் செயல்கள் பற்றி இவர் அதிரடியாக கட்டளைகளை பிறப்பிப்பதாகவும் (பத்வா கொடுப்பதாக) போலீஸ் தெரிவித்துள்ளது.
அண்மையில் கைது செய்யப்பட்ட பல தீவிரவாதிகள் ஆசியாவின் பேச்சு தங்களுக்கு தூண்டுகோலாக இருந்ததாகப் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் கட்டுப்பாட்டு எல்லையில் இருக்கும் தீவிரவாத பயிற்சி முகாம்களில் அவரது வீடியோ பேச்சுகள் ஒளிபரப்பப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளனவாம்.