ஜனாதிபதி அரசியலமைப்பை மீறியுள்ளார்...!

ராமநாதன் கண்ணனை மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமித்தமையினால் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறியுள்ளார். ஏனெனில் குறித்த நியமனம் சட்டத்தரணிகள் சங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

எனினும் அரசியலமைப்பின் பிரகாரம் மேல்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் விடயத்தில் சட்டத்தரணிகள் சங்கத்திற்கு எவ்வித வகிபாகமும் இல்லை. எனவே ஜனாதிபதி சட்டத்தரணிகள் சங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க குறித்த நியமனத்தை வழங்கியதால் அவர் அரசிலமைப்பை மீறியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பிரிஸ் தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு பொரளையிலுள்ள ஸ்ரீவஜிராஷர்ம பௌத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.(வீரகேசரி)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -