குற்றம் சுமத்திக்கொண்டு இருக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை பெற்றுக்கொடுங்கள் -நாமல்

ருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக்கொண்டு இருக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ வேண்டுகோள் விடுத்தார். ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற புதுவருட விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் பல அணர்த்தங்களை நாடு சந்தித்துள்ளது. அவற்றுள் அரநாயக்க மண்சரிவு, சாலாவ ராணுவ முகாம் விபத்து, கொலன்னாவை வெள்ளம் உள்ளிட்டவை முக்கியமானவையாகும்.

அந்த அணர்த்தங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் இழப்பீடுகளை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு இன்றும் முன்வைக்கப்படுகிறது. அதில் குறிப்பாக அரணாயாக்க மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் கூடாரங்களில் வாழ்கின்றனர். இந்த அரசாங்கம் அவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இவ்வாறான ஒரு நிலையிலே கடந்த வாரம் மீத்தொட்டுமுல்லை குப்பை சரிவு இடம்பெற்றுள்ளது. இந்த அணர்த்தத்தை எதிர்கொள்ள முடியாத இந்த அரசாங்கம் ஒருவர் மீது ஒருவர் பழி போட்ட வண்ணம் காலத்தை கடத்துகிறது.

மீத்தொட்டுமுல்லை குப்பை மேட்டு அபாயம் பற்றி தெரிந்துகொண்டு அதிகாரிகள் அசமந்தமாக இருந்துள்ளார்கள். தற்போது இழந்தவைகளை நாம் மீள பெற்றுக்கொள்ள முடியாது.

அரசாங்கம் தற்போதாவது கண் விழித்துக்கொள்ள வேண்டும். அரநாயக்க சாலாவ உள்ளிட்ட அனைத்து அணர்த்தங்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்கி அவர்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -