எம்.ஜே.எம்.சஜீத்-
அட்டாளைச்சேனை அல்-இபாதா கலாசார மன்றம் எமது பிராந்தியத்தில் அருகிவருகின்ற பாரம்பரிய கலாசார நிகழ்வுகளுக்கு புத்துயிர் அளிக்கும் முகமாக கலாசார போட்டி நிகழ்வுகளை இம்மாதம் இறுதிப்பகுதியில் நடாத்த தீர்மானித்துள்ளது. அதற்காக அல்-இபாதா கலாசார மன்றத்தினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
இக் கலாசார விளையாட்டுப் போட்டியில் பங்குபற்ற விரும்புவோர் எதிர்வரும் 2017.04.19ஆம் திகதிக்கு முன்னர் தங்களது விண்ணப்பப் படிவத்தினை கீழ்வரும் முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க முடியும் என்பதுடன் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் 0772381317 தொடர்பு கொண்டும் தங்களது பதிவுகளை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என அமைப்பின் செயலாளர் எம்.எஸ்.எம். பாஹீம் தெரிவித்தார்.
இப்பாரம்பரிய கலாசார போட்டியில் சைக்கிள் ஓட்டம், மாட்டு வண்டி ஓட்டம், இயந்திரப் படகு ஓட்டம், தோணி ஓட்டம், நீச்சல் போட்டி, பொல்லடி, நாட்டார் பாடல், கயிறு இழுத்தல், அதான் ஒலித்தல், தேங்காய் திருவுதல்(பெண்கள்), கிடுகு இளைத்தல்(பெண்கள்), வழுக்கு மரம் ஏறுதல் ஆகிய போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளது. இதில் வெற்றிபெறும் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கும் பெறுமதிவாய்ந்த பரிசில்களும் வழங்கப்படவுள்ளது.
இவ்விளையாட்டுப் போட்டியில் பங்குபற்ற விரும்புவோர் எம்.எஸ்.எம் பாஹீம், 80, சரீப் ஹாஜியார் வீதி, அட்டாளைச்சேனை எனும் முகவரிக்கு விண்ணபங்களை அனுப்பி வைக்குமாறு அதன் செயலாளர் மேலும் தெரிவித்தார்.