பூண்டுலோயா சீன தோட்டம் - புதிய கிராமம் திறப்பு விழா

லைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி. திகாம்பரத்தின் பணிப்புரையின் பேரில் பூண்டுலோயா சீன் தோட்டம் கீழ்ப்பிரிவில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைக்கப்பட்டுள்ள 18j தனி வீடுகளைக் கொண்ட ’கந்தசாமி புரம்” கிராமத்தை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு கொத்மலை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள் சிவகுமார், பிரசாந்த் ஆகியோர் தலைமையில் நேற்று இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற எம். திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சோ. ஸ்ரீதரன், சிங். பொன்னையா, சரஸ்வதி சிவகுரு, ட்ரஸ்ட் நிறுவனத் தலைவர் வீ. புத்திரசிகாமணி, பணிப்பாளர் நாயகம் லால் பெரேரா, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பிலிப் உட்பட பலர் கலந்து கொண்டு பெயர்ப்பலகையை திரை நீக்கம் செய்து வீடுகளைத் திறந்து வைப்பதையும், மேற்படி புதிய வீடுகள் அனைத்துக்கும் “நற்குண முன்னேற்ற அமைப்பின்” சார்பில் எட்வின் ரத்னம் தலைமையில் தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள், நாற்காலிகள் வழங்கப்படுவதையும் படங்களில் காணலாம்.
படப்பிடிப்பு: பானா. தங்கம்



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -