ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துரை பிரதசேசத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு பாரிய அபிவிருத்தி எனும் போர்வையில் சம்மாந்துரை ஆதார வைத்தியசாலையை 2000மில்லியன் ரூபா செலவில் இவ்வருடம் முடிவதற்குள் அபிவிருத்தி செய்வதாக வழங்கியுள்ள வாக்குறுதியினை இவ் வருடத்திற்குள் நிறைவேற்றா விட்டால் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை அரசியலினை விட்டு ஒதுங்கி கொள்ளுமா என நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர் அல்-ஹாஜ் உதுமான்கண்டு நாபீர் பகிரங்க சவாலினை விடுக்கின்றார்.
மேலும் நாபீர் பெளண்டேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.. அபிவிருத்திகளை நாபீர் பெளண்டேசனானது வரவேற்கின்ற அதே நேரத்தில் அபிவிருத்தி எனும் போர்வைக்யில் மக்களை ஏமாற்றுவதனை நாபீர் பெளண்டேசன் வன்மையாக கண்டிக்கின்றது. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையினால் இவ் வருடத்திற்குள் சம்மாந்துரை பிரதேசத்தினை அபிவிருத்தி செய்து தருவதாக வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் முடிக்கப்படா விட்டால் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வாரா என்பதே நாபீர் பெளண்டேசன் சாவாக இருக்கின்றது.
அபிவிருத்தி எனும் போர்வையில் கல்முனை பிரதேசத்து மக்களை ஏமாற்றுவது போல் சம்மாந்துறை மக்களை ஏமாற்ற நினைப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். சம்மாந்துரை ஆதார வைத்தியசாலையினை அபிவிருத்தி செய்வதற்காக தார்மீக பொறுப்பு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு இருக்கின்றது. தற்போதைய நிலையில் மாகாண முதலமைச்சு, மாகாண சுகாதர அமைச்சு, மத்திய அரசாங்கத்தின் சுகாதார பிரதி அமைச்சு என அதிகாரங்களை வைத்திருக்கும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசானது சம்மாந்துறை வைத்தியசாலை மட்டுமல்லாது கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல வைத்தியசாலைகளின் குறைபாடுகளை அபிவிருத்தி செய்கின்ற பொறுப்பு அவர்களுக்கு இருக்கின்றது.
அந்த வகையிலே இவ்வாறு அதிகாரங்களை வைத்திருக்கின்ற சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த சந்தர்பத்தினை விட்டால் இனி வருகின்ற காலங்களில் அபிவிருத்தி செய்ய முடியாது என முஸ்லிம் காங்கிரசின் தலைமை கூட்டங்களில் பேசியதற்கு அமைவாக வைத்தியசாலைகளில் உள்ள குறைபாடுகளைஅபிவிருத்தி செய்யப்படா விட்டால் முஸ்லிம் காங்கிரசின் தலைமை பதவி விலகுமா என்பதே நாபீர் பெளண்டேசனின் கேள்வியாகவும், சவாலாகவும் இருக்கின்றது.
ஆகவே வாக்குறுதினை நிறைவேற்ற முடியாவிட்டால் முக்கியமாக கண்டி, வன்னியிலிருந்து அம்பாறை மாவட்டத்திற்கு வந்து பூச்சாண்டி அரசியல் செய்வதனை இத்தோடு முடித்துக்கொள்ள வேண்டும். இறக்காமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இது வரைக்கும் எதுவித உதவிகளும் செய்யப்பட்டதா நிலையில் இவ்வாறு பூச்சாண்டி அரசியலினை மேற்கொண்டு அம்பாறை மாவட்டத்து மக்களை இன்னும் பகடை காய்களாக மாற்ற எத்தனிப்பதனை நாபீர் பெளண்டேசன் வன்மையாக கண்டிப்பதாக மேலும் தனது அறிக்கையில் தெரிவிக்கின்றது.