திருமலையில் நோய் டெங்கு கட்டுப்பாட்டுக்குள்..!

ஏ.எம்.கீத்-
திருகோணமலையில் தற்போது டெங்கு கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது.இதனை சுகாதார துறை மட்டுமல்லாது பல துறை சார்ந்த அமைப்புக்கள் மற்றும் பொது மக்களின் பங்களிப்புடனேயே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். என பிராந்திய சுகாதார வைத்திய சேவைகள் பணிப்பாளார் பி.கயல்விழி தொரிவித்தார்.

இன்று 10ம் திகதி திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.இக்கலந்துரையாடலில் மலேரியா தடுப்பு இயக்கத்தின் பதிவாளர் வைத்தியர் என்.சரவணபவன் கலந்து கொண்டார்.

தொடரந்து அவர் கருத்து தெரிவிக்கையில் திருகோணமலை மாவட்ட ரீதியாக 3438 பேர் டெங்கு நோயால் பாதிப்புக்கள்ளாகி இருந்தனர்.இதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள 12 சுகாதார சேவைகள் பணி மனை பிரிவுகளில் 5 பிரிவுகள் உயர் டெங்கு தாக்க பிரதேசங்களாக கொள்ளப்படுகிறது.இதில் கிண்ணியா 1344 பேரும் 9 இறப்பும் திருகோணமலை பிரிவில் 787 பேரும் 1 இறப்பும் உப்புவெளி பிரிவில் 602 இறப்பு இல்லை மூதூரில் 528 பேர் பாதிப்பும் ஒருவர் உயிரிழப்பும் குறிஞ்சாக்கெணி பிரிவில் 177 பேர் பாதிப்பபும் 3 பேர் உயிரிழப்பும் குச்சவெளியில் 21 பேர் பாதிப்பும் 1 உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.

தற்போது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட இந்த டெங்கு நோயை முற்று முழுதாக ஒழிக்க வேண்டுமானால் வீடுகளில் உள்ள சீமெந்து நீர் தொட்டிகள் முற்றாக அகற்றப்பட வேண்டும்.அதற்குப் பதிலாக மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் தாங்கிகளை பாவிக்க வேண்டும்.என்றார்.

தொடர்ந்து மலேரியா தடுப்பு இயக்கத்தின் பதிவாளர் வைத்தியர் என்.சரவணபவன் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது.

உள்ளுராட்சி மன்றங்களின் கழிவு அகற்றல் நடவடிக்கைகளில் கை வண்டில் மூலமாக தினமும் டெங்கு நளம்பு பெருகக் கூடிய சிறிய கழிவுகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கிராம மட்டத்தில் டெங்கு தடுப்பு குழுக்களை அதிகமாக உருவாக்கி வருகின்றொம்.

தற்போது டெங்கு பாதிப்பு அதிகமாக ஏற்படும் இடமாக காணப்படுவது பாவிக்கமல் உள்ள மலசல கூடத்தலும் பூட்டி இருக்கின்ற வீடுகளிலும் தான் அதிகமாக டெங்கு பரவக் கூடிய இடங்களாக உள்ளது.குறிப்பாக அரசாங்க உத்தியோகத்தர்களின் விடுதிகள் இதில் குறிப்பிடத்தக்க ஒன்றாக காணப்படுகிறது. 

தோடர்ச்சியாக டெங்கை கட்டப்படுத்த புகை விசுறுதல் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவே டெங்கு நோயாளர் அடையாளம் காணப்பட்ட இடத்தில் இருந்து 200 மிற்றருக்கு உட்பட்ட இடங்களுக்கு இந்த புகைகளை விசுறுப்படுகிறது என தெரிவித்தார் என மலேரியா தடுப்பு இயக்கத்தின் பதிவாளர் வைத்தியர் என்.சரவணபவன் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -