இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொடுக்கும் முக்கிய வாக்கெடுப்பில் இலங்கைக்கு வெற்றி கிடைத்துள்ளதாக பிரதி வெளியுறவு அமைச்சர் ஹர்ச டி சில்வா சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை நிறைவேற்றுவதில் இலங்கை தாமதப்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தி, இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வழங்கக் கூடாது என ஐரேப்பிய நாடாளுமன்றத்தின் இடதுசாரிகள் யோசனைகளை முன்வைத்தன.
இந்நிலையில் குறித்த யோசனை தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றில் இன்று நடத்தப்பட்ட முக்கிய வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக 436 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளதோடு 22 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில் இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வழங்க வேண்டும் என 436 பேர் வாக்களித்துள்ளனர்.