இன்று நாம் மிக அவசரமாகவும் அவசியமாகவும் சதி வலைகளையும் விலை போனவர்களையும் அறிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. அவை அறியப்பட்டும் வருகின்றது. இந்த சமூகத்தின் உண்மைக்குண்மையான தலைமையான அதாஉல்லாஹ்வின் குரலை நாம் கடந்தகாலங்களில் உணர முடியாமல் பாேனமையே நாம் செய்த தவறாகும். இவ்வாறு சம்மாந்துறையில் இடம் பெற்ற "சத்தியத்தை கண்டுகொண்டோம் முஸ்லீம் அரசியலின் உண்மையினை உரக்க சொல்வோம்" எனும் இளைஞர்களுக்கான ஒன்று கூடலின் பாேது சட்டத்தரணி ஆசிக் தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்துரைக்கையில்;
அரசியல் அரங்கில் வெற்றி தோல்வி என்பதற்கப்பால் காலத்தின் தேவை என்று ஒரு விடயமிருக்கிறது. அது மக்களை அந்த தேவையின் பால் அழைத்து செல்கிறது. இன்று அதாஉல்லாவின் வெற்றிடம் காலத்தின் தேவையாக காணப்படுகிறது. வங்குரோத்து அரசியல் தலைமைகளின் மாய விம்பங்கள் முகமூடிகளாக கிழித்து எறியப்பட்டிருக்கிறது. எல்லோரும் உண்மையான தலைமையை அநுபவ ரீதியாக உணர்ந்து கொள்கிறார்கள்.
சமமாந்துறை மக்களிடம் இன்று அபிவிருத்தி என கூவித்திரிகின்றவர்கள் கடந்த காலங்களின் அபிவிருத்தி அல்ல உரிமைக்கான இயக்கம் என்று மார்பு தட்டியவர்கள் வெளிச்சக்திகளின் ஆளூகைக்குட்பட்டு பணத்துக்காக காலாகாலமாக நம்மை அடகு வைக்கவும் துணிந்து விட்டனர். இனி அந்த நிலை இல்லை மக்கள் புரிந்து விட்டனர். ஆனால் அந்த உண்மையை ஒவ்வொரு வீடுகளுக்கும் கொண்டு செல்ல வேண்டியது எமது பொருப்பும் கடமையுமாகும் அதையே சொல்ல வேண்டி இருக்கிறது என தெரிவித்தார்.