நாட்டை நினைத்தபடி ஆட்சி செய்ய முடியாது - இரா.சம்பந்தன்

ஹஸ்பர் ஏ ஹலீம்-
”இந்த நாட்டை ஒரு குறிப்பிட்ட பிரிவினர் தாங்கள் நினைத்தபடி ஆட்சி செய்தார்கள், அந்த நிலமை இந்த நாட்டில் மீண்டும் ஏற்படாத வண்ணம் நீதி நியாயத்தின் அடிப்படையில் ஒரு நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வேண்டியது எமது கடமையாக இருக்கிறது”. .

என எதிர் கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.திருகோணமலை மெக்கெய்சர் விளையாட்டரங்கில் நடைபெற்ற யொவுன்புர இளைஞர் நிகழ்வின் இறுதி நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை 6.15 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதம மந்திரி ரணில்விக்கிரம சிங்க உட்பட அதிகளாவிலான உயர்மட்டத்தினர் கலந்து கொண்டிருந்தனர். இங்கு பேசிய போதே அவர் மேற்படி கருத்தை அவர் குறிப்பிட்டார்.

”நான் இந்த தொகுதியைச்சார்ந்தவன், இந்த மாவட்டத்தைச்சார்ந்தவன். அந்தவகையில் இந்த உரையை நிகழ்த்தவது பொருத்தமாக இருக்கும் என நான் கருதுகின்றேன். இன்று எமது நாடு ஒரு புது யுகத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது.

நீண்ட காலமாக ஏறத்தாள 30 வருடங்களாக எமது நாட்டில் ஒரு கொடுர யுத்தம் நிகழ்ந்தது. அந்த யுத்தம் நிகழ்வதற்கு சில பல காரணங்கள் இருந்தன.யுத்தம் நடைபெற்ற முறையை எல்லாவிதங்களிலும் நாங்கள் அங்கீகரிக்காவிட்டாலும் கூட அதற்கு பல காரணங்கள் இருந்தமையை நாங்கள் மறுக்க முடியாது.

யுத்தம் நடந்தமைக்கு சில காரணங்கள் இருந்தமையின் நிமித்தம் தான், இந்த நாட்டை ஆட்சிபுரிந்தவர்கள்,அவர்கள் எந்தக்கட்சியாக இருந்தாலும் சரி, யுத்தம் நடாத்தியவர்களுடன் பேச்சுவாரத்தை நடாத்தினார்கள்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன. வெவ்வேறு அரசுகளினால் அவை மேற்கொள்ளப்பட்டன. அதிலிருந்து நாம்புரிந்து கொள்ளக்கூடிய விடயம் என்ன வென்றால் அதற்கு சில காரணங்கள் இருந்தன.,யுத்தம் நடைபெறுவதற்கு,யுத்தத்தை நியாயப்படுத்துவதற்கு, யுத்தத்தை நடத்திய முறையில் பல்வேறு குறைபாடுகள் இருந்தாலும் கூட அதற்கான பல காரணங்கள் இருந்தன.அது இன்று முடிவக்கு வந்திருக்கின்றது.

எமது நாட்டில் நாம் பல்வேறு பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றோம். அவ்வாறான பல்வேறு பிரச்சனைகளுக்க தீர்வு காணப்பட வேண்டியிருக்கின்றது.பொருளாதாரப்பிரச்சனைகள்,நாட்டினுடைய கடன் சுமை,நாட்டினுடைய வறுமை,நாட்டில் சட்டம், ஒழுங்கு நிறைவேற்றப்படாமல் இருந்த நிலமை,நாட்டினுடைய நிறுவனங்கள், விஷேடமாக நீதி மன்றம் சுதந்திரமாக செயற்பட முடியாமல் இருந்தமை,பாராளுமன்றத்தின் தனித்தவத்தை பாராளுமன்றம் இழந்திருந்த தன்மை என்பன காணப்பட்டன.

மறுபுறத்தில் யுத்தத்தின்காரணமாக எழுந்த பல்வேறு பிரச்சனைகள், காணிப்பிரச்சனைகள்,காணாமல் ஆக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகள், கைதிகளின் பிரச்சனைகள் என பல்வேறு விதமான பிரச்சனைகள் ,எல்லாவற்றிக்கும் மேலாக நாட்டில் ஒரு நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்து வதற்கான முயற்சி, என்பனவும் உள்ளன.

சமத்துவத்தின் அடிப்படையில் ஜனநாயகத்தினுாடாக,புரிந்துணர்வின் ஊடாக ,நீதியின் அடிப்படையில் நியாயத்தின் அடிப்படையில், இந்த நாட்டில் வாழுகின்ற சகல மக்களும் தாங்கள் இந்த நாட்டைச்சார்ந்தவர்கள், இந்த நாடு எங்களுக்கும்சொந்தமான நாடு, என்பதனை தலை நிமிர்ந்து சொல்லக்கூடிய நிலமையை ஏற்படுத்தக்கூடிய வகையில் இந்த நாட்டில் ஒரு சுதந்திரமான சமாதானம் ஏற்பட வேண்டும்.

இந்த கருமத்தை அடைவதற்காக புது அரசியல் பிரேரணைகள் அமுலக்கு வரவேண்டும் என்பது இந்த அரசாங்கத்தினுடைய கொள்கை. அந்தப்பயணத்தைதான் நாங்கள் எதிர் நோக்கியிருக்கின்றோம்.

மேறபடி பயணத்தை உறுதி செய்வதற்கு இன்றைக்கு இந்த நிகழ்வில் அறாயிரம் இளைஞர்கள் வந்திருக்கின்றார்கள். இந்தப்பணத்தை ஊக்கவிப்பதற்கு அவர்கள் வந்திருக்கிறார்கள். இந்தப்பணத்தின் பின்னால் தாங்களும் நிற்கின்றோம் எனக்காட்டுவதற்கு. ஆகையால் நாங்கள் தற்போது வாழ்ந்த வருகின்ற சூழலை நாம் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டியது அத்தியாவசியம் என நான் கருதுகின்றேன்.

இந்த சந்தர்பத்தை நாங்கள் இழக்க முடியாது. இந்த நாடு ஒரு காலகட்டத்தில் சர்வாதிகாரப்போக்கில் போய்கொண்டிருந்தது. ஜனநாயகம் புறக்கணிக்கப்பட்டது. சட்டம ஒழுங்கு முதன்மையிடத்தை பெற்றிருக்க வில்லை. ”இந்த நாட்டை ஒரு குறிப்பிட்ட பிரிவினர் தாங்கள் நினைத்தபடி ஆட்சி செய்தார்கள், அந்த நிலமை இந்த நாட்டில் மீண்டும் ஏற்படாத வண்ணம் நீதி நியாயத்தின் அடிப்படையில் ஒரு நிரந்தர சமாதானத்தை, நிரந்தர அமைதியை ஏற்படுத்த வேண்டியது எமது கடமையாக இருக்கிறது”. .எனவும் சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -