சியாம் அபுதாஹீர்-
குறித்த அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது...
பொத்துவில், திருகோவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை, சம்மாந்துறை, மருதமுனை, நீலாவனை, இன்னும் பல ஊர்களைச் சேர்ந்தவர்கள் தூர இடங்களுக்கு வேலைகளுக்குச் செல்லவேண்டிய நிலையில் போக்குவரத்தில் பெரும் நெரிசலை எதிர் நோக்குகின்றனர்.
இதனால் பயணத்தை சிறப்பாகத் தொடர சொகுசு பஸ்ஸின் தேவை இப்பொழுது உணரப்பட்டுள்ளமையினால் உடனடியாக போக்குவரத்துக்கு விடுமாறு அக்கோரிக்கையினை அனுப்பியுள்ளனர்.
இக்காலத்தின் காலனிலை மிகவும் மோசமாகவும் சூடானதாகவும் இருப்பதனால் போக்குவரத்து பஸ்களில் நெரிசலும் கஸ்டமும் இருப்பதால் இக்கோரிக்கையினை விட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கைக் கடிதம் கிழக்கு மாகாண போக்குவரத்து மாகாணப் பணிப்பாளர், போக்குவரத்து மாகாணத்தின் தலைவர் அத்துடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
எனவே அவசரமாக பொத்துவில் தொடக்கம் திருகோணமலைக்குச் செல்ல சொகுசு பஸ்களை மக்கள் பயணத்துக்காக நியமிக்குமாறு அதிகளவான மக்கள் இணைந்து குறிப்பிட்ட இக்கோரிக்கையினை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.