ஹாபிழ்களுக்கான குர்ஆன்மனனப் போட்டி ஆரம்பம்

கிழக்கு மாகாண ஹாபிழ்களை கௌரவிக்கும் மாபெரும் மாநாட்டின் முன்னோடியாக முன்னெடுக்கப்படும் மாவட்ட மட்ட அல்குர்ஆன் மனனப் போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளன. இதன் முதற்கட்டமாக அம்பாறை மாவட்டத்துக்கான மனனப் போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை 08 ஆம் திகதி நிந்தவூர் அல் மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் நடைபெறவுள்ளன.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் அல் ஹாபிழ் நசீர் அஹமட் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார். கிழக்கு முதலமைச்சரின் எண்ணக்கருவுக்கு அமைவாகவே ஹாபிழ்களை கௌரவிக்கும் முகமாக கிழக்கு மாகாண ஹாபிழ்களின் மாநாடு எதிர்வரும் மே மாதம் நடத்தப்படவுள்ளதுடன் இதனை முன்னிட்டே அல் குர்ஆன் மனனப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

அல்குர்ஆன் மனனப் போட்டிகள் ஹாபிழ்கள் மற்றும் ஹாபிழாக்கள் என இருபாலாருக்கும் இரண்டு வெவ்வேறு தினங்களில் நடத்தப்படவுள்ளன. ஹாபிழ்களுக்கான மனனப் போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளதுடன் ஹாபிழாக்களுக்கான மனனப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை 09 ஆம் திகதி நடத்தப்படவுள்ளன.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான போட்டிகள் எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் காத்தான்குடியில் இடம்பெறவுள்ளன. இதில் ஹாபிழ்களுக்கான போட்டிகள் காத்தான்குடி ஜாமிஉல் பலாஹ் அறபுக் கல்லூரியில் இடம்பெறவுள்ளதுடன் ஹாபிழாக்களுக்கான போட்டிகள் காத்தான்குடி ஜாமிய்யதுல் சித்தீக்கியா பெண்கள் அறபுக் கல்லூரியிலும் இடம்பெறவுள்ளன,

திருகோணமலை மாவட்ட ஹாபிழ்களுக்கான மனனப் போட்டிகள் இம்மாதம் எதிர்வரும் 16 ஆம் திகதி காத்தான்குடி ஜாமிஉல் பலாஹ் அறபுக் கல்லூரியில் இடம்பெறவுள்ளன. இவற்றின் இறுதி நிகழ்வும் கிழக்கு மாகாண ஹாபிழ்களின் மாபெரும் மாநாடும் எதிர்வரும் மே மாதம் ஏறாவூரில் கோலாகலமா நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -