இலங்கையின் அரசியலில் பல வகையான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்ற இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடா தொகுதி முஸ்லிம் பிரிவிற்கான இளைஞர் அமைப்பாளராக ஓட்டமாவடியினை சேர்ந்த ஏ.எம்.எம்.சபீர் மெளலவி ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயமான சிறீ கொத்தாவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் கடந்த 19.04.2017 புதன் கிழமை கட்சியின் தலைவரும் பிரத மந்திரியுமான ரணில் விகரமசிங்கவின் நேரடி பணிப்புரையின் பெயரில் ஐக்கிய தேசிய கட்சியின் இளைஞர் அமைப்பின் தவிசாளரும் பாரளுமன்ற உறுப்பினருமான காவின்ந்த ஜெயவர்த்தன மற்றும் இளைஞர் அமைப்பின் செயலாளர் தாரக்க நானயக்கார ஆகியோரினால் உத்தியோக பூர்வமாக சபீர் மெளலவியிடம் நியமன கடிதம் கையளிக்கப்பட்டது. அத்துடன் குறித்த நியமனமானது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சிறந்த தெரிவாகவும் பார்க்கப்படுகின்றது.
மேலும் குறித்த நியமனத்தினை பெற்றுள்ள ஓட்டமாவடியினை சேர்ந்த சபீர் மெளலவி சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமின் தீவிர அரசியல் செயற்பாட்டாளராகவும், முக்கிய அரசியல் தரகராகவும் செயற்பட்ட இவர் மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் செய்யித் அலி ஷாஹிர் மெளலான போன்றவர்களுடன் நெருங்கிய நட்பினையும் பேனிவருகின்ற ஒருவராகவும் இருந்து வருகின்றார்.
எது எவ்வாறாக இருந்தலும் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று சக அரசியல் வாதிகளுடனும் இஸ்தீர நட்பினை பேனிவருகின்ற சபீர் மெளலவி மாவட்டத்தில் மட்டுமல்லாது தேசியத்தினை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற அதிகமான அரசியல்வாதிகளின் நெருக்கத்தினை கொண்டிருக்கின்றமை முக்கிய விடயமாகும். அத்தோடு தான் பிறந்த ஊரான ஓட்டமாவடி பிரதேசத்திற்கு தனக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கின் மூலம் பல அபிவிருத்திகளை செய்துள்ள சபீர் மெளலவி மேலும் குறித்த நியமனத்தின் மூலம் இன்னும் பல முக்கிய அபிவிருத்திகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.