எஸ்.ஹமீத்-
பாக்கிஸ்தானில் உளவு வேலை பார்த்ததாகக் கைது செய்யப்பட்டிருந்த இந்தியருக்கு இன்று பாகிஸ்தானின் இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குல்பூஷன் ஜாதவ் என்னும் பெயருடைய இந்தியர் தமது நாட்டில் ஒற்றர் வேலை செய்து உளவறிந்தார் என்று குற்றம் சாட்டி அவரைக் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் பலுசிஸ்தானில் வைத்துக் கைது செய்தனர். குல்பூஷன் ஜாதவ் இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரி ஆவார். ஆனாலும் அவர் உளவு பார்க்க அனுப்பி வைக்கப்பட்டதாக பாகிஸ்தான் கூறிய குற்றச்சாட்டை இந்தியா வன்மையாக மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண தண்டனை நிறைவேற்றப்படும் திகதி பற்றிய தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை. ஆயினும் இந்தத் தீர்ப்புக்கெதிராக இந்தியா கடுமையாகப் போராடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.