க.கிஷாந்தன்-
அட்டன் நகரில் தற்போது இரவு வேளைகளில் அட்டன் பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அட்டன் நகரில் முன்னெடுத்த ரோந்து நடவடிக்கைகளின் போது சிலரிடம் சோதனை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
புதுவருடம் என்பதால் வெளிமாவட்டங்களிலிருந்து அட்டன் பிரதேசத்திற்கு வரும் வாகன சாரதிகளிடம் சோதனை மேற்கொள்வது மற்றும் வாகனங்களை கவனமாக செலுத்த வேண்டும் போன்ற அறிவுரைகளை வழங்குவதற்காக இவ்வாறு ரோந்து பணியில் இவர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த ரோந்து பணியின் போது சந்தேகத்துக்கிடமான முறையில் வீதியில் நடமாடுபவர்களை மறித்து பலத்த சோதனைகளுக்கு பின்னர் விடுவிக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.