மாணவர்களின் கல்வியில் அக்கறையோடு செயற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது - ஷிப்லி பாறூக்

எம்.ரீ.ஹைதர் அலி-
மாணவர்களின் கல்வி தொடர்பாக சமூகத்தின் அனைத்துத் தரப்பினர்களும் அக்கறையோடு செயற்பட வேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது ஷிப்லி பாறூக் தெரிவித்தார். 

முறையான கல்வியினை பெற்றுக்கொள்வதில் எமது சமூகம் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. குறிப்பாக ஆண் மாணவர்களுக்கு முறையான கல்வியிலுள்ள ஆர்வம் குறைந்து கொண்டே செல்கின்றது. என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.

காத்தான்குடி அஷ் - ஷுஹதா பாடசாலையின் வகுப்பறைகளில் மின்விசிறி வசதிகள் இன்மை காரணமாக அதிக உஷ்ணம் மற்றும் நுளம்புகளின் தொல்லை போன்றவற்றால் இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.

இது விடயமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கிடம் தமது பிள்ளைகள் கல்வி கற்பதற்கான சிறந்த சூழல் ஒன்றினை அமைத்துக்கொடுக்கும் பொருட்டு மின்விசிறி வசதியினை ஏற்படுத்தித் தருமாறு பெற்றோர்கள் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக தனது சொந்த நிதியிலிருந்து அஷ்-ஷுஹதா பாடசாலைக்கு 40,000.00 ரூபா செலவில் 10 மின் விசிறிகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் பெற்றுக்கொடுத்தார். இதனை கையிக்கும் நிகழ்வு 2017.04.14ஆந்திகதி-வெள்ளிக்கிழமை நடைபெற்றது இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

கடந்த வருடம் கா.பொ.த. உயர்தரப் பரீட்சையில் உயிரியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் எமது ஊரினைச் சேர்ந்த மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றிருந்தாலும் கூட எமது ஊரிலிருந்து மொத்தமாக இரண்டு பேர் மாத்திரமே பல்கலைக்கழக மருத்துவ துறைக்கு தெரிவுசெய்யப்பட்டிந்தனர். 

குறிப்பாக பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் ஆண் மாணவர்களின் எண்ணிக்கையின் வீதம் தொடர்ச்சியாக குறைவடைந்து வருகின்றது. இவ்வாறான நிலைமை தொடருமானால் எதிர்காலத்தில் அனைத்து துறைகளிலும் பெண் பிள்ளைகள் மாத்திரமே கடமையாற்றக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகும். அவ்வாறான ஒரு நிலைமை உருவாகும் பட்சத்தில் அது சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.

எனவே எதிர்காலத்தை நோக்கியதாக சிறந்ததொரு சமூகம் ஒன்றை உருவாக்குவதற்காக மாணவர்களின் கல்வி தொடர்பாக இப்போதிருந்தே திட்டமிட்ட முறையிலும் மிகவும் அர்ப்பணிப்புடனும் செயலாற்ற வேண்டும் என தனது உரையில் தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -