பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பு - வீடியோ

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
ல்குடா பிரதேசத்தில் பல மாதங்களாக பேசப்பட்டு வரும் ).,ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இன்று 03.04.2017 திங்கட்கிழமை கல்லூரியின் கேட்போர் கூடத்தில் கல்லூரியின் அதிபர் அல்-ஹாஜ் ஹலீம் இஸ்ஹாக் தலைமையில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம் பெற்றது. இச்சந்திப்பில் முக்கிய கதாநாயகனாகவும், பாடசாலையின் பழைய மாணவனாகவும், முக்கிய ஊடக சந்திப்பு மும்மொழி பேச்சாளனாகவும் பிரதி அமைச்சரும் சட்டத்தரணியுமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும். அத்தோடு கீழே பாடசாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையுடன் ஊடக சந்திப்பில் நிகழ்ந்த விடயங்களின் காணொளி எமது இணைய வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலளர் பிரிவில் உள்ள ஓட்டமாவடி கிராமத்தில் அமையப்பெற்றுள்ள ஓட்டமாவடி மத்திய கல்லூரி – தேசிய பாடசாலை 1917.03.19 திகதி திரு.JS.கந்தையாவை அதிபராகவும், தலைமை ஆசிரியராகவும் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதற்கமைய கடந்த 2017.03.19 திகதியுடன் தனது நூற்றாண்டு நிறைவை எட்டியுள்ள இக்கல்லூரி தற்போது தரம் 06 தொடக்கம் 13 வரையான வகுப்புக்களில் சுமார் 1700 மாணவர்களையும் 65 ஆசிரியர்களையும் 26 கல்விசாரா ஊழியர்களையும் கொண்ட 1ஏபி சுப்பர் பாடசாலையாக திகழுகின்றது.

1957ல் கனிஷ்ட பாடசாலையாகவும் 1959ல் சிரேஷ்ட பாடசாலையாகவும் தரம்பெற்ற இப்பாடசாலை 1998ல் பிரதேசத்தின் முதலாவது தேசிய பாடசாலையாகவும் கல்வி அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டது. ஓர் ஆண்கள் பாடசாலையான இங்கு க.பொ.த. (உ/த) கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப வகுப்புக்களில் மாத்திரம் பெண் பிள்ளைகள் கல்வி கற்று வருகின்றனர். வருடாந்தம் நூற்றுகணக்கானோர் பல்கலை கழகங்களுக்கும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களுக்கும் உள்வாங்கப்பட்டு வருகின்றனர். கல்வி அடைவுகளில் மாத்திரமன்றி ஏனைய இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் சமாந்தரமானதும் காத்திரமானதுமான வளர்ச்சி போக்கினை கொண்டுள்ளதுடன் பிரதேசம், வலயம், மாவட்டம், தேசியம், மாகாணம், என மிகச் சிறந்த அடைவு மட்டங்களை தொடர்ந்தேர்சியாக பதிவு செய்து வந்துள்ளமையினை காணலாம்.

இதுவரை சுமார் 20க்கும் மேற்பட்ட வைத்தியர்கள், 25க்கும் மேற்பட்ட பொறியியலாளர்கள், 200க்கும் மேற்பட்ட விஞ்ஞான பட்டதாரிகள், பல நூறு வர்த்தக பட்டதாரிகள், எனப் பிரசவித்துள்ள இப்பாடசாலை 2020ல் க.பொ.த. (சா/த), (உ/த) பரீட்சைகளில் 100வீத சித்தி என்ற இலக்கையும் கொண்டுள்ளது. 2015ல் க.பொ.த. (உ/த) பரீட்சையில் தொழிநுட்ப பிரிவில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றதுடன் 2016ல் தேசியத்தில் மூன்றாமிடமும் (தமிழ் மொழி மூலத்தில் தேசியத்திலும் முதலாமிடம்) வரலாற்று சாதனை படைக்கப்பட்டது. 2013/14 சக்தி டீவியின் THE DEBATER தேசிய மட்ட விவாத போட்டியில் சம்பியனாகியதுடன் 2011 சார்க் வலைய நாடுகளுக்கிடையிலான Science Olympiad போட்டியில் தங்க பதக்கமும் வென்று சர்வதேசத்திலும் தடம் பதித்தது.

இதற்கமைய எதிர் வரும் 2017.04.29ம் திகதி பாடசாலையின் நூற்றாண்டு நிறைவு பிரதான வைபவம் முதன்மை அதீதியாக அதிமேதகு ஜனாதிபதி திரு.மைத்திரிபால சிரிசேன அவர்களின் பங்குபற்றுதலோடு இடம் பெறவுள்லமை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் ஏப்ரல் 29, 30 மே 01,02 ஆகிய நான்கு தினங்களுக்கு மாபெரும் கல்வி அறிவியல் கண்காட்சி மற்றும் கலை, கலாசார நிகழ்வுகளுடன் கூடிய நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.

நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு பாடசாலையின் முகாமைத்துவ குழு பாடசலை அபிவிருத்தி குழு, பழைய மாணவர் சங்கம் என்பன இணைந்து பின்வரும் 08 பிரதான வேலைத்திட்டங்களைமுன்னெடுத்து வருகின்றனர்.

நூற்றாண்டு நினைவு முத்திரை வெளியிடல்

நூற்றாண்டு நினைவு மலர் வெளியிடல்

தேசிய மட்ட எழுத்தாக்க போட்டி( கட்டுரை, சிறுகதை)

மாவட்ட மட்ட பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டி.

பாடசாலைக்கான பஸ் வண்டி கொள்வனவு.

நில அலங்காரத்துடனான கூடிய சுற்றாடல் பசுமைப்படுத்தும் திட்டம்.

சுமார் 10 கோடி ரூபா பெறுமதியிலான பெளதீக வள அபிவிருத்தியை ஏற்படுத்துதல்.

மாபெரும் கல்விக் கண்காட்சி கலை கலாசார நிகழ்வுகளுடன் கூடிய 04 நாட்களுக்கான நூற்றாண்டு நிறைவுதினக் கொண்டாட்டங்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -