நோட்டன் பிரிட்ஜ் மு.இராமச்சந்திரன்-
அட்டன் நகர் உட்பட மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நகரில் பொருள் கொள்வனவிற்கு வருகைதரும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்
450 ருபாவிற்கு விற்பனை செய்த உரித்த கோழி150 ருபாவால் அதிகரித்து 600 ருபாவிற்கும் மீன் ஒரு கிலோ கிராம் 100 ருபாவினலும் அதிகரித்துள்ளதுடன்1200 ிருபாவிற்கு விற்பனை செய்த இஸ்ஸே ஒரு கிலோ கிராம் 700 ருபாவினால் அதிகரித்து 1900 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது
விலை உயர்வு தொடர்பில் தொடர்பில் சில்லறை வியாபாரிகள் கருத்து தெரிவிக்ககையில் அரசங்கத்தினால் நிர்னய விலை கொண்டுவந்ததன் பின்னர் சிரிய அளவில் பண்ணையை நடத்தி வந்தவர்கள் பண்ணையை நடத்தமுடியாது மூடிவிட்டனர் தற்போது ஒரு சில பண்ணைகளே இயங்கிவருகின்றமையினால் போதியளவு கோழி இறைச்சிகளை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது என தெரிவித்தனர்
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தீயில் தமிழ் சிங்கள புத்ததான்டை கொண்டாட தயாராகும் மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.