அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் சம்பூர் விஜயம் தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்,கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ,சுகாதார அமைச்சர் ஏ,எல்,,எம் நசீர் ,கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ் தண்டபாயுதபானி,வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவத்தி கலப்பத்தி,பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட திணைக்கள அதிகாரிகள் படையினர் என பலரும் பங்கேற்றிருந்தனர்,
அத்துடன் ஜனாதிபதியின் விஜயத்தின் போது பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
இதன் போது சம்பூர் வைத்தியசாலை திறக்கப்படவுள்ளதுடன் லங்கா பட்டண பாலம் திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது,
அது மாத்திரமன்றி கடைத்தொகுதிகள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதுடன் கலாசார மண்டபமொன்றும் ஜனாதிபதியினால் திறந்து வைக்கபபடவுள்ளது.
அத்துடன் ஜனாதிபதியின் சம்பூர் விஜயம் தொடர்பான மற்றுமொரு கூட்டம் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் இடம்பெறவுள்ளதுடன் இதன் போது ஜனாதிபதியின் வருகை தொடர்பான பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன.