மினுவாங்கொடை நிருபர்-
கொலன்னாவை குப்பை மேடு சரிந்த சம்பவம் நடைபெற்ற இடங்களைப் பார்வையிடச் செல்வதை, இயன்றளவு தவிர்க்குமாறு வெல்லம்பிட்டிய மற்றும் கொழும்பு பிராந்தியங்களுக்குப் பொறுப்பான பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர். கொலன்னாவை குப்பை மேடு சரிந்ததில், மரணித்தவர்களின் குடும்பங்களையோ அல்லது இதனால் பாதிக்கப்பட்டவர்களையோ சென்று பார்ப்பதை முடியுமானவரை தவிர்ந்துகொள்ளுமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இவ்வாறு செய்வதால், பொக்குவரத்து நெரிசல் ஏற்பட அதிகம் வாய்ப்பிருப்பதாலும், பாதிக்கப்பட்டு விபத்துக்குள்ளானோருக்கு சிகிச்சை அளிப்பதற்கு இடையூறுகள் ஏற்படும் என்பதினாலும், இவ்விடங்களில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதாலும், முன் கூட்டியே இவ் அறிவுறுத்தலை வழங்குவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.