ஓட்டமாவடி சதீக் முகமட்-
கிழக்கையும் மேற்கையும் பாலமாக இணைக்கும் சர்வதேச சைக்கிளோட்டம் இன்று பாசிக்குடவில் எல்.எஸ.ஆர் நிறுவனத்தின் முழு அனுசரனையுடன் ஆரம்பமாகியவுள்ளதாக அதன் தவிசாளர் திலக் வீரசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்
இந்த போட்டியை நடாத்துவதற்கு இரண்டு வருடங்களாக எல் எஸ் ஆர் நிறுவனம் கலந்தாலோசித்ததாகவும் பாசிக்குடாவிலிருந்தே இந்த சைக்கிளோட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்துக்கமையவாக இந்த சர்வதேச சைக்கிளோட்டபோட்டியானது இடம்பெறுவதகாவும் கூறினார .இச்சைக்கிளோட்ட போட்டியானது பாசிக்குடாவிலிருந்து மஹியங்கனை கண்டி குருநாகல் வழியாக கடைசியாக நீர்கொழும்பை அடையும் .
சுமார் 334 கிலோமீட்டரை இச்சைக்கிளோட்ட போட்டியாளர்கள் ஓட வேண்டியுள்ளதாகவும் ; இந்த சைக்கிளோட்ட போட்டியில் நெதர்லாந்து,மலேசியா,சிங்கப்பூர்,பாக்கிஸ்தான,பங்களாதேஸ் போன்ற நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர் இதில் அறுபத்தைந்து சைக்கிளோட்ட போட்டியாளர்கள் உள்ளனர் இதில் நாற்பது இலங்கை சை;க்கிளோட்ட போட்டியாளர்கள் பங்குபற்றுவதாகவும் தெரவித்தார்.
இது சர்வதேச ஒழுங்கு விதிமுறைகளுக்கமைய இச்சைக்கிளோட்ட போட்டியானது நடைபெறவுள்ளது ஒவ்வொரு சைக்கிளோட்ட போட்டியாளர்களுக்கு வானலைகள் மூலமாக தொடர்புகருவிகள் பொருத்தப்பட்டுள்ளது இதனால் அவர்கள் குறிப்பிட்ட அணியின் காரை தொடர்பு கொள்ள முடியும். அதில் அச்சைக்கிளோட்ட போட்டியாளர்களுக்கு தேவைப்படும் சகல தேவைகளுக்குமான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது அத்துடன் ஒவ்வொரு சைக்கிளுக்கும் கமரா பொருத்தப்பட்டுள்ளதால் அவர்கள் சைக்கிளோட்ட முடிவடையுடம் இடத்தை அடையும் போது அவர்களின் நேரக்கணிப்பீடு கணிக்கப்பட்டு அவர்களின் நிலைகள் குறிக்கப்படும் .
இந்த சைக்கிளோட்ட போட்டியின் மூலம் ; சர்வதேச அனுபவங்களை எமது நாட்டு போட்டியளார்கள் பெறுகின்றனர். ஆவர் மேலும் கருத்து தெரவிக்கையில் எமது லங்கா ஸ்போட்ஸ் லைசர்ஸ் நிறுவனம் ஏற்கனவே ரம்பில் இந்த ஜங்கில் என்ற போட்டியை நடாத்தி சர்வதேச புகழை ஈட்டியது என்றும் குறிப்பிட்டார்