”வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் நிலையை ஆராய்ந்த அபிவிருத்திக்குழு”



நிப்ராஸ்-

டெங்கினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைகக்காக வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வாழைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 8 வயதுடைய சிறுமி ஷிபா சிகிச்சை பலனளிக்காத நிலையில் கடந்த 10.04.2017ம் திகதி திங்கட்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார். இத்துயரச் சம்பவம் இப்பிரதேசத்தை துயரத்தில் ஆழ்த்தியது.

கடந்த வருடம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் பதிவு செய்யப்பட்டு தற்போது சிறப்பான முறையில் இயங்கி வரும் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் தங்கள் காலப்பகுதியில் இவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றதையிட்டு தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும் கவலைகளையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.

வாகரை, மாங்கேணி, ஜெயந்தியாய, ரித்திதென, கல்குடா, வாழைச்சேனை, ஓட்டமாவடி, காவத்தமுனை, கிரான் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வைத்தியத் தேவைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையே நம்பி இருக்கின்றனர்.

அதே நேரம் தமது வைத்திய சிகிச்சைக்காகவும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அன்றாடம் பல்வேறு இனத்தவர்களும் இவ்வைத்தியசாலையை நாடி வருகின்றனர், ஆனால், இவ்வைத்தியசாலையில் அவசர சிகிச்சை அவசியப்படும் நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்குப் போதியளவு வசதியும், இடவசதியின்மையும் காணப்படுவதால் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சையினை வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது.

இந்நிலையில், வைத்தியசாலையின் நிலைமைகளை நேரடியாகக் கண்டறிய வைத்தியசாலைக்கு வருகை தந்த இவ்வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரிடம் இவ்வைத்தியசாலையின் நோயாளர் விடுதிகள், இங்குள்ள ஆளணிப்பற்றாக்குறை என்பவற்றை வைத்திய அத்தியட்சகர் நேரடியாக அழைத்துச்சென்று விபரித்ததுடன், அதன் உண்மை நிலைமைகளை அறிய முடிந்தது.

நோயாளர் விடுதிகளைப்பார்வையிடும் போது அதிகளவிளான நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சைக்கான இடவசதிகளும், கட்டில்களும் இன்றி அல்லல் படுவதை அவதானிக்க முடிந்ததுடன், அங்குள்ள நிலைமைகள் வேதனையளிக்கின்றது.

அதுமாத்திரமல்லாமல் நேயாளிகளைக் கவனிப்பதற்குரிய தாதியர்கள் பற்றாக்குறையாகக் காணப்படுவதுடன், ஐம்பது நோயாளிகளை இரண்டு பேர் மாத்திரம் கவனிக்கும் நிலை காணப்படுகிறது. இந்நல்லாட்சியில் ஆட்சி மாற்றத்திற்கு அதிகம் பங்கு வகித்த சிறுபான்மைச்சமூகம் அதிகம் பயன்படுத்தும் இவ்வைத்தியசாலையை அரசியலுள்ள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர், மத்திய மாகாண சுகாதர அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் இதன் தேவைகளை உணர்ந்து அதனை நிறைவேற்றித் தர வேண்டிய அவசியமுள்ளது.

ஏனைய பிரதேசங்களை விட அதிகளவிளான மக்கள் இவ்வைத்தியசாலையை வைத்தியத் தேவைக்காகப் பயன்படுத்துகின்றனர். அது மாத்திரமின்றி, கிழக்கு மாகாணத்தில் அதிகளவிளான வைத்தியத்துறை அபிவிருத்திகள் அம்பாறை மாவட்டத்திலேயே இடம்பெறுவதாகவும் இப்பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் கவலை கொள்வதுடன், குற்றஞ்சுமத்துவதையும் காணக்கூடியதாகவுள்ளது.

இவ்வைத்தியசாலையில் தேவைகளை முறையிட்டு வைத்தியசாலையைத் தரமுயர்த்தத் தேவையான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள அதிக அக்கரையுடன் அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் தயாரகவுள்ளனர்.

இதே போன்று இன்னுமொரு மரணம் இப்பிரதேசத்தில் எச்சந்தர்ப்பத்திலும் இடம்பெறக்கூடாதென்பதில் நாம் உறுதியான நிலையில் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டியது நமது கடமையாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -