எச்.எம்.எம்.பர்ஸான்-
பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொலன்னறுவை மஜீதியா அரபுக்கல்லூரியின் இஸ்தாபகரும் ஆயுட்காலத்தலைவருமான அல்-ஹாஜ் எஸ்.ஏ.அப்துல் மஜீத் அவர்களின் 77 வருட வாழ்வில் அவர் புரிந்த பணிகள் மற்றும் அவர் செய்த சேவைகள் பற்றி தொகுக்கப்பட்ட ‘’வரலாற்றில் ஒரு வசந்தம் மஜீத் ஹாஜியார் வாழ்வும் பணியும்’’ சுயசரிதை நூல் வெளியீட்டு விழா அண்மையில் பொலன்னறுவை கதுருவெல டவுன் ஜும்ஆ பள்ளிவாயலில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
தம்பாளை இஸ்லாமிய நலன்புரி அமைப்பின் இஸ்தாபகரும் மஜீதியா அரபுக்கல்லூரியின் பணிப்பாளருமான அஷ்ஷெய்க் அஸ்மி யூசூபி அவர்களின் தலைமையில் வெளியிடப்பட்ட இந்நூலினை ஆசிரிய ஆலோசகர் அஹமது லெவ்வை அப்துல் கபூர் எழுதியுள்ளார்.
இந்நிகழ்வில் நூலாய்வு உரையினை கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.ரீ.எம்.ரிஸ்வி மஜீதி அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அல்-ஹாஜ் எஸ்.ஏ.அப்துல் மஜீத் அவர்களும் ஏனைய அதிதிகளாக வட மத்திய மாகாண சபை உறுப்பினர் அன்சார் ஹாஜியார், கல்லூரியின் நிருவாகிகள், பழைய மானவர்கள், பொலன்னறுவை மாவடத்திலுள்ள பல முக்கியஸ்த்தர்கள், பள்ளிவாயல் நிருவாகிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.