வில்பத்து வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் - சம்மாந்துறையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்






பிறவ்ஸ்-

ர்த்தமானி அறிவித்தல் மூலம் மக்களின் குடியிருப்புக் காணிகள் வனபரிபால திணைக்களத்தின் பாதுகாக்கப்பட்ட இடமாக பிரகடனப்படும் நிலவரம் காணப்பட்டால், அந்த எல்லைகளை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஷஅபிவிருத்தி இலக்கின் இன்னுமோர் அடைவுத் தருணம்| எனும் தலைப்பில் நேற்றிரவு (11) சம்மாந்துறையில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றுகையில் அமைச்சர் மேலும் கூறியதாவது,

விப்பத்து விவகாரத்தில் சிலர் விஷயம் தெரியாமல் விமர்சனங்களை செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த விடயத்தை வைத்து தங்களுடைய அரசியல் இலாபத்தை சம்பாதித்துக்கொள்ளலாம் என்பதற்காக எல்லாவற்றிலும் அநியாயம் நடக்கிறது என்பதை சொல்லவராமல், எங்களுடைய நியாயங்களை சொல்லி, நடந்த விடயங்களில் திருத்தங்களை செய்வதிலிருந்து இவர்கள் தவறிழைத்து வருகிறார் என்பதைத்தான் நாங்கள் பார்க்கிறோம்.

வில்பத்து விவகாரம் என்பது என்னவென்று தெரியாமல் சிலர், யானை பார்த்த குருடன் போல பெரிய கூட்டங்களை நடாத்தி, அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். வில்பத்து விவகாரத்தில் நடந்த விபரீதங்கள், அவற்றின் பின்னணி என்பவற்றை அறிந்துகொண்டு மிகவும் கவனமாகத்தான் முஸ்லிம் காங்கிரஸ் இந்த விடயத்தை கையாள வேண்டியிருக்கிறது.

யார் தவறிழைத்திருந்தாலும் சரி, புலம்பெயர்ந்த மக்கள், குறிப்பாக முசலி மக்கள் வில்பத்து விவகாரத்தினால் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அதிலுள்ள உண்மை நிலவரங்களை நாங்கள் ஜனாதிபதியின் செயலாளருக்கு தெளிவுபடுத்தியபோது அவர் அதனை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டார்.

வர்த்தமானி அறிவித்தல் மூலம் மக்களின் குடியிருப்புக் காணிகள் வனபரிபால திணைக்களத்தின் பாதுகாக்கப்பட்ட இடமாக பிரகடனப்படும் நிலவரம் காணப்பட்டால், அந்த எல்லைகளை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். எதிர்வரும் 27ஆம் திகதி சகல அதிகாரிகளுடன் கரடிக்குழி, மறிச்சுக்கட்டி பகுதிக்கு வந்து இந்த பிரச்சினைக்கு தீர்வுதருவதாக கூறியிருக்கிறார்.

அதேபோல், கிழக்கு மாகாணத்திலுள்ள காணிப்பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை காண்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து பாராளுமன்றத்தில் வைத்து பேசியிருக்கிறோம். இந்தக் காணிகளை வனபரிபாலனத் திணைக்களம், வனவிலங்கு திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் என்பன இந்தக் காணிகளை அபகரித்து வைத்துக்கொண்டிருக்கின்றன. நில அளவையாளர்களுடன் சம்பந்தப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று, பாதிக்கப்பட்ட மக்கள் முன்னிலையில் விசாரணை செய்து காணிப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் நாங்கள் முழுமையாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.

புதிய தேர்தல் சீர்திருத்தம் மூலம் தொகுதிவாரியான தேர்தல் முறையை அறிமுகப்படுத்தினால் முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சந்தேகத்துக்கிடமான நிலைக்கு வந்துவிடக்கூடும். இந்த திருத்தத்துக்கு நாங்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, அதற்கான மாற்று முறையாக எங்களது பிரேரணையை முன்வைத்து, அதனை பரிசீலனைக்க உட்படுத்துமாறு வேண்டிக்கொண்;டுள்ளோம். தொகுதிவாரி தேர்தல் முறைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் ஆதரவளிக்கக்கூடாது என்று நாங்கள் பேச்சுவார்த்தை நடாத்தியிருக்கிறோம்.

சம்மாந்துறை பிரதேசத்தை அம்பாறை நகரம்போன்று நாங்கள் அபிவிருத்தி செய்யவுள்ளோம். சம்மாந்துறை பிரதான வீதியில் இருமருங்கிலும் வாகனங்களை நிறுத்தக்கூடிய வசதிகளுடன் கூடிய கடைகளை அமைத்து, வீதியின் மத்தியில் தெரு விளக்குகளை நிறுவி அதிநவீன பாதையாக மாற்றுவதற்கான முயற்சிகளை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் முன்மொழிந்திருக்கிறார்.

சம்மாந்துறையில் கவனிப்பாரற்றுக்கிடக்கும் பல்நோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான காணியை சுவீகரித்தே ஆகவேண்டும் என்ற தீர்மானத்துக்கு நாங்கள் வந்திருக்கிறோம். அந்தக் காணியில் அழகான சந்தைக் கட்டிடம், விரிவான பஸ் தரிப்பிடம் என்பவற்றை அமைப்பதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். இதற்கு எவ்வித தடைகள் வந்தாலும், அவற்றையும் பொருட்படுத்தாது இந்த அபிவிருத்தியை செய்தே தீருவோம்.

கல்முனை, சம்மாந்துறை மற்றும் நிந்தவூரின் சில பகுதிகளையும் சேர்த்து பாரிய நகர அபிவிருத்தி திட்டமொன்றை அமுல்படுத்தவுள்ளோம். இதற்கான திட்டமிடலுக்கு மாத்திரம் 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டவரைபு மொறட்டுவ பல்கலைக்கழக பொறியியலாளர் மூலம் நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டால் இதுவொரு வரலாற்றுச் சிறப்புமிக்க அபிவிருத்தியாக என்றும் நிலைத்துநிற்கும்.

சம்மாந்துறையில் 400 மீற்றர் ஓட்டப்பந்தய மைதானத்தை அமைப்பதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். தொழில்நுட்பக் கல்லூரிக்கு பின்னாலுள்ள காணிக்கு இந்த மைதானத்தை அமைப்பதற்கான திட்டவரைபை செய்யுமாறு நான் நகர திட்டமிடல் அமைச்சின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் இந்த மைதானத்தை அமைப்பதற்கு உதவுவதாக கூறியுள்ளார்.

சவூதி அபிவிருத்தி நிதியத்தின் மூலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு 2,000 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. அதற்கான திட்டமிடல் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அத்துடன், சம்மாந்துறை கைகாட்டி சந்தியிலிருந்து அம்பாறை வீதி வரையான பண்டுவாய்க்கால் வீதி அவிருத்திக்காக நான் 40 மில்லியன் ரூபாவை நான் ஒதுக்கீடு செய்துள்ளேன்.

இந்த வருட நடுப்பகுதிக்குள் சம்மாந்துறையில் அமைக்கப்பட்டுவரும் ஆடைத் தொழிற்சாலையை திறந்துவைப்பதற்கு முதலமைச்சர் நஸீர் அஹமட் இணக்கம் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அம்பாறைக்கு வேலைச் செல்லும் யுவதிகளுக்கு காலடியிலேயே தொழில்வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும்.

முஸ்லிம் காங்கிரஸுக்கு வெளியிலுள்ளவர்களை விமர்சனம் செய்வது தலைமையின் கடைமையல்ல. இந்த இயக்கம் பலவீனப்படுத்தப்பட்டால், முழு முஸ்லிம் சமூகமும் பலவீனப்படுத்தப்படும் என்ற அபயாத்தை உணர்ந்தவர்களாக, இந்த இயக்கத்தை பலப்படுத்துவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -