ஏ.எம்.கீத் திருகோணமலை-
திருகோணமலை கந்தளாய் 94ம் கட்டை பிரதேசத்தில் நேற்று இரவு இந்திய பெற்றோலிய நிருவனத்திற்கு சொந்தமான பவுசரில் டிசல் திருட்டில் ஈடுபட்ட மூவரை கந்தளாய் பொலிஸார் கைது செய்தனர். திருகோணமலையில் இருந்து கொழும்புக்கு டீசல் கொண்டுசெல்லப்படும் பவுசரில் கந்தளாய் 94ம் கட்டை எனும் இடத்தில் சுமார் 460 லீற்றர் திருடி அதற்கு பதிலாக மண்னெண்னையை கலப்படம் செய்துக்கொண்டிருக்கும் நிலையில் கந்தளாய் மற்றும் அம்பாறையை சேர்ந்த மூவரை கந்தளாய் பிரதேச பொலிஸார் கைது செய்தனர். இவர்களை இன்று கந்தளாய் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளில் கந்தளாய் பொலிஸார் ஈடுபடுகின்றனர்.