கிண்ணியா போக்குவரத்துப் பொலிஸார் பிரிவில் கடமையாற்றிவரும் ஆனந்த என்பவரினால் நேற்று முன்தினம் (09) தாக்கப்பட்ட பெரியறுமுனையைச் சேர்ந்த எஸ்.எம்.கைசர் வயது(30) மூன்று நாள் சிகிச்சை பெற்று கிண்ணியா தளவைத்தியசாலையில் இருந்து பூரண குணமடையாமல் வீடு திரும்பியுள்ளார்.
இவருக்கான நீதி கிடைக்கவில்லை மற்றும் இதனால் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தாக்குதலுக்குள்ளானவர் தெரிவித்தார் .
பொலிஸில் முறைப்பாடு செய்தபோதும் கிண்ணியா பொலிஸாரால் குறித்த பொலிஸார்மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்த அவர் இவ்வாறு தனக்கு நடந்ததைப்போன்று குறித்த பொலிஸார் மீதோ அரச அதிகாரிகள் மீதோ இப்படியான தாக்குதல் நடந்தால் அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்டவரை கைது செய்து சட்டண்தின் முன் நிறுத்தி இருப்பார்கள் எங்களைப் போன்ற சாதாரணவர்களுக்கான சட்டம் இந்நாட்டில் இல்லையா.. உரிமைகள் மளுக்கப்படுகின்றன என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இவ்வாறான காட்டுமிராண்டித்தாக்குதல் எமது கிண்ணியாவில் தனிப்பெரும் முஸ்லீம்களைக் கொண்ட ஊரில் நடப்பது மாற்று அரச அதிகாரிகள் மேற்கொள்வது காடையர்களின் மோசமான செயலை சகித்துக்கொள்ள முடியாது .எமதூரில் இருக்கும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராவது இவ்விடயம் தொடர்பாக விசாரனைக்கு உதவவில்லை என்பதையும் தாக்குதலுக்குள்ளானவர் கவலை தெரிவித்தார் . குறித்த பொலிஸாரின் கிண்ணியா போராளிகள் தாக்குதலுக்குள்ளான குடும்பத்தாருக்கு நேரடியாகவும் தொலைபேசியிலும் சமாதானமாக செல்லுங்கள் என்றும் இதனை பெரிதாாக பொருட்படுத்தாமல் விட்டுவிடுங்கள் என்றும் கூறியதாகவும் தாக்குதலுக்குள்ளானவர் தெரிவித்தார்.
எனவேதான் குறித்தபொலிஸார்மீது சட்டத்தை மதித்து சட்டநடவடிக்கை எடுக்கவும் சட்டத்தின் முன்யாவரும் சமமாக மதிக்கப்படல் வேண்டும் சாதாரணவனுக்கு ஒரு சட்டமா? நல்லாட்சி அரசு இவ்விடயம் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கவும் பாரபட்சம் காட்டுவதையும் சட்டமே தடைசெய்கிறது சட்டத்தைப் பாதுகாக்கும் போக்குவரத்துப் பொலிஸார் சட்டத்தையே அவமதிக்கின்றார்.