நயவஞ்சகத்துக்கு மறுபெயர் ஹுனைஸ் - முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் காமில்

"மறிச்சுக்கட்டி பிரதேச மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அமைச்சர் ரிஷாட் பதியுதீனே வில்பத்துவை வைத்து படம் காட்டுகிறார்" என்று இவ்வளவு காலமும் கூறி வந்த முன்னாள் எம் பி ஹுனைஸ் பாரூக் தற்போது அமைச்சர் ஹக்கீமையும் முஸ்லிம் காங்கிரஸ்காரர்களையும் அழைத்துக் கொண்டு நாளை முசலிப் பிரதேச சபையில் அதிகாரிகளை அழைத்து தாங்கள் பேச்சு நடத்த வெளிக்கிட்டிருப்பது ஒரு வெட்கக்கேடான செயலென்று முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான பாலைக் குழியைச் சேர்ந்த எச் எம் காமில் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

அமைச்சர் ரிஷாட் மீது தமது தனிப்பட்ட காழ்ப்புணர்வின் காரணமாக ஹுனைஸ் பாரூக் மேற்கொண்ட பழிவாங்கலே முசலி மக்களை இன்று நிர்க்கதியாக்கியுள்ளது.

வில்பத்துவில் அமைச்சர் ரிஷாட் மக்களைக் குடியமர்த்துவதற்காக காடழிக்கின்றார் என்றும் அரபுக் கொலணியை உருவாக்குகின்றார் என்றும் இனவாதிகளும், சூழலியலாளர்களும் அபாண்டங்களைப் பரப்புவதற்கு மூலகர்த்தாவாக இருந்தவர் இந்த ஹுனைஸ் பாரூக்கே. இனவாதிகளை எமது பிரதேசத்திற்குக் கூட்டி வந்து போலியான தகவல்களை அவர்களுக்கு வழங்கியவரும் அந்த நயவஞ்சகரே.

இனவாத ஊடகங்களை இங்கு வரவழைத்து முகந்தெரியாதவர்களுக்கு பணம் வழங்கி அமைச்சர் ரிஷாட்டைப் பற்றி தவறான தகவல்களை தனியார் ஊடகங்களில் பரப்புவதற்கு அவர் துணை போனார்.

இறைவனுக்கு அடுத்தபடியாக அமைச்சர் ரிஷாட் இல்லாவிட்டால் ஹுனைஸ் பாரூக் பாராளுமன்ற வளவுக்குள்ளே கால் பதித்திருக்க முடியாது. ஹுனைஸின் பெயரிலே பாடசாலையும் ஓர் ஊரும் அமைந்திருக்கவும் முடியாது. இவ்வாறு தனது பெயரில் இவை உருவாகுமென்று அவர் எந்தக்காலத்திலும் கனவு கண்டிருக்கவும் மாட்டார்.

தமிழ் அகராதிகளில் அடுத்தடுத்த பதிப்புக்களிலே நயவஞ்சகத்தின் ஒத்தகருத்துள்ள ஒரு சொல் இடம்பெறுவதென்றால் அது ஹுனைஸ் என்பதாகவே இருக்கும்.

மறிச்சுக்கட்டி மீள்குடியேற்றத்தை பூதாகரமாக்கி வர்த்தமானிப் பிரகடனத்திற்கு வழிகோல் அமைத்துக்கொடுத்த சமூகத்துரோகி ஹுனைஸ் பாரூக் இப்போது அமைச்சர் ரிஷாட்டே பிரச்சினையைத் தீர்க்கவிடாமல் குழப்புதவதாக அறிக்கை விட்டுள்ளார்.

16 வருட காலம் முஸ்லிம்களின் எந்தப்பிரச்சினைக்கும் உருப்படியான எந்தத் தீர்வையும் பெற்றுக்கொடுக்க திராணியில்லாத ஒருவருக்குப் பின்னால் அலைவது கேவலமானது.

முசலி மக்களின் மீள்குடியேற்றத்துக்காக இனவாதிகளுடன் தொடர்ந்தும் போராடி, அவர்களது பூர்வீகக் காணிகளை துப்பரவாக்கி வீடமைத்துக் கொடுத்து மக்களை படிப்படியாக மீள்குடியேற்றிவரும் அமைச்சரை முசலி மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.

மீள்குடியேற்றத்துடன் மட்டும் அமைச்சர் தனது பணியை நிறுத்திக் கொள்ளாது அவர்களுக்கு அடிப்படை வசதிகள் அளித்து வாழ்வாதார உதவிகளை வழங்கி மக்களின் மனங்களில் என்றுமே நிலைத்திருக்கின்றார்.

அமைச்சர் ரிஷாட் சில அரசியல்வாதிகளைப் போன்று சீசனுக்கு மட்டும் படை பட்டாளங்களுடன் இங்கு வந்து கழுத்தில் மாலைகளுடன் கொழும்புக்கு திரும்புவர் அல்லர் என்பதை ஹுனைஸ் போன்ற கோடரிக் காம்புகள் உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -