சவுதியின் அதிரடி உத்தரவு - வெளிநாட்டினருக்கு பாதிப்பு


ணிக வளாகங்களில் வெளிநாட்டினர் பணிபுரிவதற்கு தடை விதித்தும், வணிக வளாகங்களில் உள்நாட்டினரை பணியில் அமர்த்தவும் சவுதிஅரேபிய அரசு அதிரடி உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

சவுதிஅரேபியாவில் ஏற்பட்டு வரும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் வேலையில்லா பிரச்சினையை தீர்ப்பதற்காக, அந்நாட்டு மக்களுக்கு புதிதாக 35 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சவுதிஅரேபிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும் நாட்டின் எண்ணை வளத்தை மட்டுமே நம்பாமல், வணிக ரீதியிலான உள்நாட்டு பொருளாதார வளத்தை பெருக்குவதற்கு உள்ளுர்வாசிகளை வணிக நடவடிக்கையில் ஈடுபடுத்தும் திட்டத்தை அந்நாட்டு அரசாங்கம் வகுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. 

அத்தோடு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்க்கு சவுதி இளவரசர் மொஹமட் பின் சல்மான் வகுத்துள்ள திட்டத்தின் பிரகாரம், வேலையின்றிருக்கும் சவுதி அரேபியர்களுக்கு உள்நாட்டு வணிக வளாகங்களில் வேலைவாய்ப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளதோடு, அந்நாட்டு வணிக வளாகங்களில் வெளிநாட்டினரை பணியில் அமர்த்தவும் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -