ஏ.எச்.ஹப்சர்-
மூதூர் ஏசி வீதியானது நீண்ட காலமாக குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மேற்பார்வையின் கீழ் வீதி அபிவிருத்தி திணைக்களம் தற்போது காபட் வீதியாக புதிய வீதி இடப்படுகிறது. இவ்வீதியில் வடிகான்கள் அமைக்காமையும் நீர் ஓடுவதற்கு குறுக்காக சிறு நீரோடு பாதை அமைக்காமையும் மக்களுக்கு அதிருப்தியாக இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்கள்.
இவ்வாறு முறையாக நீரோடு பாதை அமைக்கப்படாதவிடத்து மழை காலங்களில் நீர் தேங்கி நிற்பதுடன் வீதிகள் வெள்ளமாக காட்சியளிக்கலாம் எனவும் மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்கள். எனவே இது தொடர்பாக முறையான வீதியமைப்பினை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.