கொலை அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மாவில்லு வனத்திற்கு புறப்பட்டார் அமைச்சர் ஹக்கீம்.!

ர்ச்சைக்குரிய வில்பத்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை காணும்பொருட்டு குறித்த பிரதேசத்துக்கு சென்று பார்வையிடுமுகமாக தலைவர் ஹக்கீம் தலைமையில் இன்று காலை முசலி பிரதேசசபை மண்டபத்தில் அது பற்றிய கலந்துரையாடலுடன், விளக்க உரையும் இடம்பெற்றது. 

இதனை குழப்புவதற்கு பலர் நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் வரவளைக்கப்பட்டிருந்தார்கள். பதற்ற நிலை ஒன்று உருவாக்கி இறுதியில் குழப்பம் செய்ய முற்பட்டவர்கள் தோல்வியடைந்து கலைந்து சென்றார்கள். 

அதனைத் தொடர்ந்து பிரச்சினைக்குரிய வன பிரதேசத்துக்கு செல்வதற்கு ஆயத்தமான நிலையில் அங்கு செல்வதில் பாதுகாப்பு பிரச்சினை உள்ளதாகவும், அங்கு ஆபத்து காத்திருக்கின்றது என்றும் கூறி பாதுகாப்பு தரப்பினர்கள் தயக்கம் காட்டிக்கொண்டிருக்கின்றார்கள். 

ஆனால் மரணித்தாலும் பரவாயில்லை குறித்த இடங்களுக்கு சென்றுதான் ஆகவேண்டும் என்பதில் அமைச்சர் ஹக்கீம் அவர்கள் பிடிவாதமாக உள்ளார். அத்துடன் பொலிசாரின் பரிதாப நிலையினைக்கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன் பொலிஸ்மா அதிபருடன் தொடர்புகொண்டு விடயத்தினை விளங்கப்படுத்தியதுடன் என்ன ஆனாலும் சரி குறித்த இடங்களுக்கு சென்றுதான் ஆகவேண்டும் என்ற நிலையில் அமைச்சர் ஹக்கீம் வன பிரதேசத்துக்குள் செல்ல தயாராகின்றார். 
முகம்மத் இக்பால்,
சாய்ந்தமருது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -