யாழில் திகுவி சர்வதேச கல்விச்சேவை நிறுவனத்தின் ஆரம்பவிழா.!

திகுவி (THIGUVI) சர்வதேச கல்விச்சேவை நிறுவனத்தின் உத்தியோகபூர்வ ஆரம்பவிழா யாழ்ப்பாணம் ஜெட்விங்க் விடுதியில் இன்று (07.04.2017) முற்பகல் 10மணிமுதல் 11.30மணி வரையில் நடைபெற்றது. மேற்படி நிறுவனத்தின் சர்வதேச இணைப்பாளர் திரு. இளங்குமரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இயக்குநர்கள் செல்வரட்ணம் குணபாலன், விஜய் இரட்ணசபாபதி ஆகியோரும் பங்கேற்றிரந்தனர். இந்நிகழ்வின் விருந்தினர்களாக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், டான் தொலைக்காட்சி நிறுவன இயக்குநர் எஸ்.எஸ். குகநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

நிறுவத்தின் செயற்பாடுகள் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட, நிறுவன இயங்குநர் திரு. செல்வரட்ணம் குணபாலன் அவர்கள், 

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் திகுவி சர்வதேச கல்விச்சேவை நிறுவனத்தின் கிளை ஒன்று திறக்கப்பட்டு ஜனவரி மாதம் முதல் இயங்கிவருகின்ற நிலையில் இன்றையதினம் அதன் உத்தியோகபூர்வ ஆரம்பவிழா நடைபெற்றுள்ளது. திகுவி சர்வதேச கல்விச்சேவை நிறுவனம் வெளிநாடு சென்று கல்விகற்ற விரும்புவோர்க்கு உதவி புரிவதுடன், குறைந்த கட்டணத்தோடு மேற்படி கல்வியினைப் பெற வழிசெய்கின்றது. 

கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, போலந்து ஆகிய நாடுகளில் இயங்கி வருகின்ற இந்நிறுவனம் ஒரு முகவராக அல்லாது, ஆலோசனை வழங்குகின்ற மற்றும் உதவி புரிகின்ற நிறுவனமாகவே செயற்பட்டு வருகின்றது. மேலும் இந்நிறுவனம் முல்லைத்தீpவில் தனியாக பாடசாலையொன்றினை ஆரம்பித்து இலவசமாக ஆங்கிலக் கல்வி மற்றும் கணிதம், விஞ்ஞாம் போன்ற வகுப்புகளையும் நடாத்தவிருக்கின்றது. 

அதேபோன்று பாடசாலை செல்வதற்கு ஆடைகள், அப்பியாசப் புத்தங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் இல்லாத காரணத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆண்டுதோறும் பல சிறுவர்கள் பாடசாலையிலிருந்து விலகி வருகின்றனர். இவர்கள் தொடர்ந்தும் தமது கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு உதவிகளை வழங்குவதோடு, மட்டக்களப்பு மாவட்டத்திலும் தனியாக பாடசாலையொன்றினை ஆரம்பித்து இலவசக் கல்வியை வழங்கவுள்ளோம் என்றார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -