மீன்கள் போடப்பட்ட கிணற்றுக்குள் குளோரின் போட வேண்டாம்..!


அப்துல்சலாம் யாசீம்-
மீன்கள் போடப்பட்ட கிணற்றுக்குள் குளோரின் போட வேண்டாமென தேசிய மலேரியா தடுப்பு இயக்கத்தின் பதிவாளர் டொக்டர் என்.சரவணபவன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுமக்கள் சுகாதார பிரிவினரின் ஆலோசனைகளைப் பெறாமல் டெங்கு நோயின் தாக்கத்தை குறைக்கும் நோக்கில் பயத்துக்காக மீன்கள் போடப்பட்ட கிணற்றுக்குள் குளோரினை இட்டு வருவதாகவும் அதனால் மீன்கள் இறப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் டெங்கு நுளம்புகள் சூழலுக்கு ஏற்றமாதிரி மாற்றிக்கொள்ளக்கூடிய ஆற்றல் மிக்க நுளம்பாக மாறியுள்ளதாகவும் இவ்வளவு காலமும் வீடுகளில் வெளிப்புறத்திலும், தண்ணீர் தொட்டில்களிலும், டயர்களிலும், யோகட் கப்களிலும் பரவிய நுளம்புகள் தற்போது ஆழமான கிணறுகளில் பெறுக ஆரம்பித்துள்ளதாகவும் டொக்டர் என்.சரவணபவன் தெரிவித்தார்.

இதேவேளை பாவிக்காத மலசல கூடங்கள், மூடப்பட்டிருக்கின்ற வீடுகளிலும் டெங்கு பரவும் அபாயம் அவதானிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அத்தோடு பாவிக்காத மலசலகூடத்திற்கு ஒயில் ஊற்ற வேண்டுமெனவும் வீடுகளில் சிங் பாவிக்கப்படுவதினால் அதில் சேமித்து வைக்கும் தண்ணீரிலும் டெங்கு குடம்பிகள் இருந்ததை அவதானிக்க முடிந்ததாகவும் பிரிஞ் பின் புரம் தண்ணீர் சேகரிக்கும் பகுதி காணப்படுகின்றது அதற்கு தேங்கண்னையை ஊற்றுமாறும் தேசிய மலேரியா தடுப்பு இயக்கத்தின் பதிவாளர் என்.சரவணபவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -