அப்துல்சலாம் யாசீம்-
நீதிமன்ற தீர்ப்புக்கள் பொது மக்களுக்கு சென்றடைவதன் மூலம்தான் சமூகத்தில் குற்றச்செயலகைக் குறைக்க முடியும் என திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.பிரேமசங்கர் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நீதிமன்றத் தீர்ப்புக்கள் நீதிமன்றங்களுக்குள் மட்டும் இருக்கக் கூடாது. அதனால் பொது மக்கள் மத்தியில் எந்தவித தாக்கமும் ஏற்படப் போவதில்லை. எனவே, தீர்ப்புக்கள் மக்கள் மத்தியிலும் செல்ல வேண்டும். இதற்கு ஊடகங்கள் பெரும் பங்களிப்பு செய்கின்றன.
இப்படிச் செல்வதன் மூலம் பொதுமக்கள் சட்டம், தண்டனை பற்றியெல்லாம் விளங்கிக் கொள்வர். இதன் மூலாம் சமூகத்தில் குற்றச்செயல்கள் குறைவதற்கான வாயிப்பு உள்ளது என்றார்.
அத்துடன் நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவதன் நோக்கம் தங்களுடைய பெயர்களை விளம்பரப்படுத்துவதற்காகவோ அல்ல. குற்றச்செயல்கள் செய்தவர்களுக்கு வழங்கப்படுகின்ற தீப்புக்களின் மூலம் மற்றையவர்கள் பயந்து குற்றங்கள் செய்யாமல் இருப்பதற்காகவே எனவும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அண்ணலிங்கம் பிரேமசங்கர் குறிப்பிட்டார்.