நம்மைப் போஷித்து வாழ வைக்கும் உயிர்களைப் பலிகொடுத்து உண்டு மகிழ்வது அடுக்காது-யோகேஸ்வரன்




ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

மக்கு உணவூட்டி போஷித்து நம்மை வாழ வைக்கும் உயிர்களைப் பலிகொடுத்து புத்தாண்டு காலங்களில் உண்டு மகிழும் அக்கிரமம் கடவுளுக்கே அடுக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு முதலைக்குடா இந்து இளைஞர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்து இiளுஙர் அபிவிருத்திச் சங்கத்தின் 40ஆம் ஆண்டு நிறைவு விழாவும் 'சால்வை' நூல் வெளியீட்டு நிகழ்விலும் அதிதியாக கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

அறநெறி மாணவர்கள், சமயக் குரவர்கள் மற்றும் இந்து இளைஞர்கள் மத்தியில் மேலும் உரையாற்றிய அவர், தற்போதைய இயந்திர வாழ்க்கையோட்டத்தில் இயற்கையோடு ஒன்றித்து வாழும் வாழ்வை நாம் தொலைத்து விட்டு கானல் நீர் வாழ்க்கையைத் தேடி ஓடிக் கொண்டிருக்கின்றோம்.

அதனால் இயற்கையோடு நமக்கு இருக்கும் உறவு தூரப்பிட்டிருக்கின்றது.

பசுக்களும் மாடுகளும் மனிதர்களோடு வாழ்ந்து மனிதர்களைப் பல வழிகளிலும் போஷிக்கும் எமது வளங்கொழிக்கும் செல்வங்களாகும்.

நமக்குப் பாலூட்டி போஷிக்கும் அத்தகைய செல்வங்களை அறுப்பதற்கு மடுவங்களுக்கு அனுப்பி அறுத்து அதன் மாமிசத்தை உண்டு அகமகிழும் காருண்யமற்ற கலாச்சாரத்திற்கு நாம் ஆளாக்கப்பட்டிருப்பது ஆகுமானதல்ல.

நம்மோடு கூட இருந்து நமக்காக உழைத்த மாடுகளை அறுவைக்கு விற்றுப் பணமாக்கி அதன் மாமிசத்தை புசிப்பது ஒரு துரோகச் செயலாகும்.

அதுவும் புத்தாண்டு போன்ற நல்ல புண்ணிய காலங்களில் இந்த துரோகச் செயலை நாம் நாம் அதிகமாகச் செய்கின்றோம்.

இவ்வாறான துரோகச் செயல்களில் ஈடுபடுவதற்கு நாம் முதலில் நம்மையும் பிறரையும் அனுமதிக்க கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் அவை எமது இனத்தையும் நாம் பாரம்பரியமாக பேணி வந்த பண்பாட்டு கலாசார விழுமியங்களையும் வெகுவாகப் பாதிக்கும்.

புத்தாண்டு காலத்திலே சைவ உணவு உண்ண வேண்டிய நாம் உயிர்களை பலிகொடுத்து அவற்றினை உண்கின்றோம்.

நம் உயிர் வாழ்வுக்காக சிறப்பான நாளில் பிற உயிரைப் பலியெடுப்பது எவ்வகையில் நியாயமானது.

பிறக்கும் புதுவருடத்தில் சைவ உணவினை அனைவரும் உட்கொள்ள வேண்டும்.

பண்பாடு பாராம்பரியங்கள் ஓர் இனத்தின், மதத்தின், பிரதேசத்தின் அடையாளங்களாகும்.

அவை இப்பொழுது எம்மிலிருந்து விடுபட்டுச் செல்கின்றது. மாணவர்கள் தொடக்கம் இளைஞர்கள் வரை மதுவுக்கு அடிமையாகியுள்ளனர்.

இவற்றினை இல்லாமல் ஒழிப்பதற்கு இளைஞர்கள் முன்வர வேண்டும். இல்லையாயின் நமது எல்லா சிறப்பு அம்சங்களும் எம்மை விட்டுப் பறிபோவதுடன் நாம் இயற்கையின் எதிரிகளாகவும் சீரழிய வேண்டி வரும் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -