பாறுக் ஷிஹான்-
யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்கு ஒரு தொகுதி தளபாடங்கள் வழங்கி வைத்துள்ளதுடன் கைத்தொழில் வணிக அமைச்சினால் நடாத்தப்படும் தையல் பயிற்சி திட்டத்தினையும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆரம்பித்து வைத்துள்ளார்.
கடந்த 8 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்த நிலையில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கும் பாடசாலை சமூகத்தின் அழைப்பினை ஏற்று அங்கு சென்றிருந்தார்.
இதன் போது கல்லூரி அதிபர் எம்.அஸ்ரப்பினால் அமைச்சர் வரவேற்கப்பட்டதுடன் பாடசாலையின் கல்வி வளரச்சியில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு வெற்றிக்கிண்ணம் பரிசில்கள் அமைச்சரினால் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த அமைச்சர் இப்பாடசாலையின் புனரமைப்பு விடயத்தில் அன்று தொட்டு இன்று வரை பங்களிப்பை வழங்கி வருவதுடன் மேலும் இவ்வருட இறுதிக்குள் பாடசாலையின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வினை பெற்று கொள்ள நடவடிக்கை மேற்கொள்வேன் என உறுதி கூறினார்.
பாடசாலைக்கு அமைச்சர் மேற்கொண்டு வருகின்ற சேவையை கௌரவித்து மக்கள் பணிமனை தலைவரும் அமைச்சரின் யாழ் மாவட்ட மீள் குடியேற்ற இணைப்பாளர் சுபியான் மௌலவியினால் அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு கௌரவமளிக்கப்பட்டது.
அத்துடன் யாழ்ப்பாணம் சோனகத் தெரு பகுதியில் கைத்தொழில் வணிக அமைச்சினால் நடாத்தப்படும் தையல் பயிற்சி திட்டம் மற்றும் புனரமைக்கப்படுகின்ற உள்ளுர் வீதிகள் சிலவற்றையும் அமைச்சருடன் இணைந்து சுபியான் மௌலவி திறந்து வைத்தார்.
மேற்குறித்த நிகழ்வகளில் அமைச்சரின் யாழ் மாவட்ட மீள் குடியேற்ற இணைப்பாளர் சுபியான் மௌலவி அமைச்சரின் இணைப்பு செயலாளர் இர்சாத் ரஹ்மதுல்லாஹ் அமைச்சரின் பொது தொடர்பு அதிகாரி மொஹிடீன் உப்புக்கூட்டுத்தாபண தலைவர் அமீன் மற்றும் மக்கள் காங்கிரசின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அமீன் ஹாஜீயார் அமைச்சரடன் உடனிருந்தனர்.