விஹாரை, பள்ளிவாயல், கோவில்களை வைத்து பிரச்சினைகளை உருவாக்குகின்றனர்- ஜனாதிபதி

ந்த நாட்டுச் சொந்தக் காரர்களான தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழாவிட்டால் நாடு சின்னாபின்னப்பட்டுவிடும். என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதங்கம் வெளியிட்டார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் (தேசியப்பாடசாலை) யின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்வியியல் மற்றும் வர்த்தகக் கண்காட்சி நிகழ்வுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்தார். அங்கு உரையாற்றும் போதே இதை தெரிவித்தார் அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

திடீரென்று பௌத்த விஹாரையை நிறுவுவதால் அல்லது புத்தர் சிலையை வைத்து விடுவதால் பிரச்சினை கிளம்பி விடுகின்றது. சில இடங்கிளிலே பள்ளிவாசலை வைத்துக் கொண்டும். இன்னும் சில இடங்களில் இந்துக் கோயிலை வைத்துக் கொண்டும் பிரச்சினையை உருவாக்குகின்றார்கள்.

ஆயினும், இந்த மதங்களைக் கடைப்பிடிப்பவர்கள் மனிதர்கள் எல்லோரும் மனிதர்களாகத்தான் இருக்கின்ற அதேவேளை பௌத்தம், இந்து இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய எந்த மதங்களை எடுத்துக் கொண்டாலும் அந்த மதங்கள் எவையும் பிரச்சினைகளை உருவாக்கி சீரழிந்து போக மக்களுக்குப் போதனை செய்யவில்லை.

இதனை மனிதர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டுச் சொந்தக் காரர்களான தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழாவிட்டால் நாடு சின்னாபின்னப்பட்டுவிடும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -